Nivetha   (கவியோகி)
22 Followers · 32 Following

Tamil is my breath
Joined 23 June 2020


Tamil is my breath
Joined 23 June 2020
14 AUG 2022 AT 19:49

முந்தி நின்று சாலை கடக்கும் வேளையில்
முகம் தெரியா மூன்றாம் நபர், "பத்திரம்!! வண்டி வருகிறது!"
என்ற பார்வையில் என்னை தடுக்கும் அந்த ஒரு நொடியாகவே வேண்டும் இந்த உலகம்.

-


3 AUG 2020 AT 18:44

இன்றைய சின்ன சின்ன ஆசைகளை இழக்கும் போதும் மகிழ்வாகவே உள்ளேன் ..
அவையாவும் நாளைய வெற்றியின் படிகட்டாக மாறும் என்பதால் ..

-


16 NOV 2021 AT 20:00

உதிரும் ஒவ்வொரு இலைக்கும் வருந்தினால் மரம் மரமாக இருக்காது

-


2 AUG 2020 AT 17:00

அதீத காதல்

என்னையே சுற்றிசுற்றி வருகிறாய்
காதோரம் வந்து கானா பாடல் பாடுகிறாய்
எத்தனை முறைதான் விரட்டுவது
மீண்டும் மீண்டும் என்
மேனியையே தேடுகிறாய்
என் மீது தான் அவ்வளவு காதலா ?
இல்லை உன் பசிதீர என்னைத்
தேடும் உன் சுயநல செயலா ?
இரவில் உறக்கம் தொலைந்து போனது
உன் மேல் வெறுப்பும் உயர்ந்து போனது ...

கொசு தொல்லை தாங்க முடியல 😁

-


27 JUL 2020 AT 10:10

தன் உயர்வுக்கு மட்டுமே போராடுபவனை சாமானியன் பேசுவான்
நாட்டின் உயர்வுக்கு போராடுபவரை சரித்திரமே பேசும்

-


20 JUL 2020 AT 17:47

மனதை ஈர்த்த மாய
இசையில் விழுந்தேனோ ?...
உணர்வை தூண்டும்
உன்னத வரிகளில் விழுந்தேனோ ?...
வரிகள் தரும் பொருளில்
தான் விழுந்தேனோ ?...

இதை எண்ணி பார்க்கையிலே
மீண்டும் விழுகிறேன் ..
ஆசை பாடல்கள் அரங்கேறும் போதெல்லாம் ..

-


13 JUL 2020 AT 19:37

வெற்றி பெற தகுதி
இருக்கிறதோ இல்லையோ
ஆனால்..
கடுமையான உழைப்பு
கட்டாயம் கண் திறக்க
செய்யும்
அந்த கடவுளை

-


4 JUL 2020 AT 16:32

மனிதனின் எதிகாலத்தை மாயபெட்டி உண்பதா !!!


இதழ்களின் வாசிப்பு குறைந்து போனது - இமை
காட்சிகளை தேடியே அலைந்து திரிந்தது
மனமோ சிந்தனை இன்றி சிதறி போனது - உடன்
எதிர் கால வாழ்வும் சேர்ந்தே வீழ்ந்தது
மெகா தொடரின் மருமகள் சூழ்ச்சியாம் - அதை
கற்றே பல குடும்பங்கள் வீழ்ச்சியாம்
மனிதனின் வாழ்வை மாய்க்கும் மாயபெட்டி - என்றும்
எதிர்ப்போம் அதனை நம் கவிகொட்டி

-


30 JUN 2020 AT 8:04

ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தான் உன் வெற்றியை தடுக்கிறது

-


29 JUN 2020 AT 17:18

இங்கு சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையே இல்லாதவர்கள் அல்ல ..
கவலையை மறைக்க தெரிந்தவர்கள் ..

-


Fetching Nivetha Quotes