அமைப்பியல்துறை அன்பு   (அன்பு)
766 Followers · 88 Following

read more
Joined 8 May 2018


read more
Joined 8 May 2018

மறுபடியும் கெஞ்சுகிறேன் என்னவள் தூங்கினாள்
கோபித்துக் கொண்டிருந்தாள் என்மகள்

-



இனப்பெருக்க உறுப்பு
இனம் சுட்டுவதில்
பிழை புரியும்.
திருநங்கை யாரென்பதை
தீர்மானிக்க முடியாது

எதிரெதிர் துருவம்
பிணைவதில்
பிரியம் மறுத்து,
ஒரே பாலினம்
ஒன்றாக ஒட்டும்.
யாருக்கு யார்மீது
ஈர்ப்பென்பதை
அனுமானிக்க முடியாது.

இயற்கையில்
அபூர்வங்கள் ஆயிரம்.
அவற்றை
ஆச்சரியமாய் காண்போம்.
அருவருப்பாய் பார்ப்பதை
நிறுத்துவோம்.

-



நாற்றத்தை பொருட்படுத்தாது,
நாவால் அருந்தி,

நாற்றம் வீசம்
உதடுகளால்,
நாற்ற
வார்த்தைகளை வீசி,

இருக்குமிடத்திலே வாந்தியெடுத்து,
அதின்மேலே,
உருண்டு படுத்து,

நாசியால் நாற்றத்தை
உணராதிருப்பதுதான்
மதுபானம் அளிக்கும்
இன்பமோ, என்னவோ

-



கண்ணெதிரே
கடவுள் காட்சியளித்தால்,
காதலால் வீழ்த்தி,
கட்டிலில் தள்ளிடுவாள்.
தன் முந்தானையை
பிடித்தபடி,
பின்னால் நகரச் செய்திடுவாள்.
இறைவனை
நூலால் நகர்த்தும்
பொம்மலாட்டக்காரியாவாள்

-



அழுகிய பிரேதத்தின்
மக்கிய சதையினை
கடித்து இழுத்து
அசைபோட்டு மென்றபடி
அசைந்து கொண்டிருந்த
ஆன்மாவுக்கு
விக்கல் ஏற்பட்டது

அங்குமிங்கும்
விழிகளை அசைத்து
குடித்திட குருதியை
தேடியது

கொசுக்கள்
கப்பம் கட்டிய
உதிரத்தை
எடுத்து குடித்தது

இரத்தம் அருந்தியும்
விக்கல் தீராது
சப்தமெழுப்பிக்
கொண்டிருந்த
ஆத்மாவின் எதிரில்
என்னவள் தோன்றினாள்

அவளைக் கண்ட
அச்சத்தில்
பிசாசின்‌
விக்கல் நகர்ந்தது

-



காற்றினில்
மேளத்தின் இராகத்தை
கரைத்தது யார்??

வளியினில்
மல்லிகை மணத்தினை
விரவியது யார்??

ஒலியின் விரல்கள்
செவியை திருகி
அழைப்பதென்ன??

காற்றின் கரங்கள்
நாசியை பிடித்து
இழுத்ததென்ன??

நடைபாதையை
நிறைத்தது
மாந்தர்கள் கூட்டம்

மணப்பாதையை
துவங்க உரிமையளிக்கும்
மணநாள் கொண்டாட்டம்

-



மழைத்துளி

-



என்முன்னே
என்னவளை
விண்ணிலிருந்து தாவி
கட்டிப் பிடித்தது மழைத்துளி

முகில்களின்‌ கசிவுகள்
அவள் மறைத்து
வந்த அங்கத்தை
அனுமதியின்றி தொட்டது

சினமுற்ற நான்
குடையால் காத்தவளை
வீடு சேர்த்தேன்.
சதக் சதக் என்று
நகர்ந்ததில்
அவள் துகிலில்
ஒட்டிக்கொண்டது சகதி.

ஆடை அகற்றிக்
கொண்டிருந்தவளை,
பின்பறமுமிருந்து
ஆலங்கணம் செய்து,
காணுமிடமெல்லாம்
மழைபோல் ஈரம் செய்தேன்.

வான் மழை நின்றபின்னும்
வாய் மழை நிறுத்துவதில்லை

-


Fetching அமைப்பியல்துறை அன்பு Quotes