செங்காட்டு மண்ணுல
செருப்பு ஏதும் இல்லாம,
மாடு ரெண்டு மல்லுக்கட்ட,
அத மறிக்க நானோட,
காலு ரெண்டு ஏர் மிதிக்க
கையி ரெண்டு கையிர் பிடிக்க
நாலு காலு பாய்ச்சல் ரெண்டு
ஏர் இழுக்க, கை ஒன்னு முத்திறைக்க...
சோளக்காட்டு தண்ணி பாய்ச்சல்
அத்துமீறி பொளி கடக்க
நானோடிப் போவேனோ
பொளி வெட்டி பாத்தியிட...
-
வெயிலால் கருத்த தோல்,
நலிந்த உடல்,
காய்ந்த வயிறு;
என்றாலும் மருத நிலத்தின் மாமன்னர்கள் இந்த விவசாயிகள்!!!-
💕 இயற்கை விவசாயம்..💕
💕அன்று மண்ணில் நுண்ணுயிர்
உண்டு வளர்ந்த விவசாயம்💕
💕இன்று மண்ணில் நுண்ணுயிர்
மடிந்து வளர்ந்ததே💕-
கண்ணே..
அன்று கசிந்த
என் கண்ணீரை
சேகரிக்க
கால்வாயாய்
இருந்தாயே..
இன்று..
வாடி வதங்கிய
என்னை இதமாய்
முத்தமிட்டு உரமிட
வாயேன்டா..
- இளங்கவி ஷாலினி கணேசன்-
வெயில் சுடும் காலம் வந்து விட்டது;
நீரில்லா நிலமும் வரண்டு விட்டது;
விவசாயியின் மனமோ வாடியது;
மரணமோ தொடர்ந்தது.
-
நாளை
வயிற்றில் சுருக்கம்
வந்துவிடுமோ என்ற அச்சத்தில்
கயற்றில் தொங்கிய போராளி..
ஊருக்குச்சோறு போட
முடியாத
என்பதனால்....
-
விதைகள் எல்லாம் போட்டாச்சு விண்ணை நோக்கி பார்த்தாச்சு கொத்தடிமைகளாக வாழ்ந்த கூட்டம் கொஞ்சம் பிழைக்க வழிகாட்டு கொட்டும் மழை துளிகளில்
கொஞ்சம் மலரும் மண் வாசம்
நீ வீசும் காற்றினிலே
நான் சுவசம் பெறுகிறேன்
சாயமில்ல விவசாயி-
களை ஆயிரம் எடுக்க தெரிந்த கலைஞன், இன்று கலியுக கட்டிடங்களால் கவிழ்ந்து நிற்கிறான்,
அறுவடை பற்றி அறிந்த அரசனுக்கு,
அரசியல் சூழ்ச்சி தெரியாதலால்
இன்று அனைத்தும் இழந்து நிற்கிறான்
மண்ணை ஆண்ட மன்னர்களுக்கு,
இன்று மனிதனே எட்டப்பனாய் மாறியதால்,மலைத்து நிற்கிறான்
விலை பேசி வீழ்த்த பல விஷமிகள் இருந்தும், வீழ்ந்த முறை எல்லாம் விதையாய் எழுகிறான் விவசாயி-
எத்தனை
பிரசவவலிதான்
கண்டுவிட்டனான்?
ஒவ்வொரு
அறுவடையிலும்
என் உழவன்!-
ஒவ்வொரு தமிழனின் தனி தேடலும் உரக்க கூறும் ஒருமித்த குரலும் சமூகத்தின் சாடலாக மாறும் பொழுது தான் எங்கே முகிலன்?? என்ற கேள்விக்கு பதில் கிடைக்குமோ??
-