Raghavi Devaraj   (Raghavi Devaraj)
230 Followers · 154 Following

read more
Joined 8 January 2017


read more
Joined 8 January 2017
25 SEP 2024 AT 16:54

ஓயாமல் மோதிக்கொள்ளும்
கடலும் கரையும்;
தொய்வுறாமல் வளர்கின்றது
பல காதல்களையும்!

-


18 SEP 2024 AT 12:32

இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்,
துன்பங்கள் எண்ணி வாடுது பாழ்மனம்,
ஆசை வலையில் மாட்டிக்கொண்ட மீன் இனம்,
இந்த சாபத்தில் இருந்து பிழைக்குமோ மானுடம்?

-


23 SEP 2022 AT 18:38

அன்பு மடல் வடித்தேன்,
"காதலா?"என்றனர்.

ஆசை கவிதை வரைந்தேன்,
"காமம் போலும்!" என்றனர்.

உள்ளதை உள்ளபடி எழுதினேன்,
"அரசியல் பேசுகிறாள்!" என்றனர்.

சரி உள்ளதை மாற்றி எழுதினேன்,
"இது வெறும் கற்பனை" என்றனர்.

அதனால்தான் சொல்கிறேன்...
"இந்த கவிதை நான் புனையவில்லை"

-இப்படிக்கு நான்!

-


25 JAN 2022 AT 14:02

மரங்கள் சொன்னது
இலையுதிர் பின்
இளந்தளிர்
நம்பிக்கை என்று!

-


11 JAN 2022 AT 21:52

பக்கத்து வீட்டுக்காரியிடம்,
"வெளியூர் செல்கிறேன்.
என் செடிகளை கொஞ்சம்
பராமரித்துக்கொள்"
என்று சொல்லும் செயலுக்கு
காதல் என்று பெயர்!

-


15 DEC 2021 AT 21:37

வன்மை,
வலிமை,
தன்மை,
தந்தது
தனிமை!

-


7 DEC 2021 AT 19:47

காதல் கானம் இசைக்கையிலே,
காமம் கொஞ்சம் ஏறயிலே,
மணிக்கணக்காய் பேசயிலயே,
அறியா பல செய்தி சொல்லையிலே,
சாந்தமாய் இரவு படுக்கயிலே,
சுவாரசியம் கொஞ்சம் கூடயிலே,
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் புரிந்தது
என்னவளும் வானொலியும்
ஒன்று என்று!

-


27 NOV 2021 AT 23:20

சாரல் ஒன்று வீச,
திடீரென முளைக்கும்,
காளானும்!
காதலும்!

-


12 NOV 2021 AT 20:17

கவிதை எழுதி
காகிதம் மடித்து
கப்பல் விட்டேன்
மூழ்கியது கப்பல்
நினைவுகளின் பாரம்
தாழவில்லை போலும்!

-


21 NOV 2019 AT 11:01

To which court
Should I appeal?
For she captured
My heart...💕

-


Fetching Raghavi Devaraj Quotes