Kavipriya MarKy   (Mickey marky)
464 Followers · 261 Following

Writing is my relaxation.
Aimless since birth.
Doctor by profession.
Joined 22 October 2016


Writing is my relaxation.
Aimless since birth.
Doctor by profession.
Joined 22 October 2016
7 NOV 2023 AT 10:44

உணவு இருக்க வாய்ப்பில்லை,

மழை நேரத்தில் கதகதப்பாகவும் இல்லை,

கூட்டத்திலிருந்து ஒரு காகம்
சில வினாடிகளுக்கு மட்டும்
வந்தமர்ந்து சென்றது.

நமக்குப் பிடித்த பாடல் எங்கேயோ ஒலிக்க,
நெரிசல் மிகுந்த சாலையிலும்
நின்று கேட்ட ஞாபகம் வந்தது.

-


18 JUL 2023 AT 16:23

சிறகு முளைக்கும் வரை
பறக்காமல் இருப்பதால் தான் என்ன?
எட்டிப்பார்த்தால் வானவில்
தெரியாமலா போய்விடும்
பட்டாம்பூச்சியின் கண்களுக்கு!

-


1 MAY 2023 AT 14:59

பிறந்தேன்.

இறக்கும் முன்,

எனக்கான மகிழ்ச்சிக்கு,
நானே காரணமாகும் போது,

வாழ்ந்தேன்.

-


20 MAR 2023 AT 2:29

கடைசி வண்டியைப்
பிடித்தாக வேண்டிய
நேரத்தில் மட்டும்,
ஆட்டோவில் மீட்டருக்கு மேல் எவ்வளவு கேட்டாலும்
அதை நியாயப்படுத்திக்கொள்ள
ஓட்டுநரிடம் ஒரு காரணம் இருந்துவிடுகிறது!

-


6 MAY 2022 AT 19:26

வேறேதும் வேண்டாம்
இருசக்கர வாகனத்தில் பின்னமர்ந்து
அப்பாவின் மேல் சாய்ந்து
பயமின்றி தூங்கும் பிள்ளையின்
நம்பிக்கையை தந்துவிடு போதும்..

-


16 SEP 2019 AT 0:17

அழுகையும் சிரிப்பும்
அயராது உதிர்க்கும்;
உறக்கத்தின் போதும்
கைவிரல் பிடிக்கும்;
உன்மீதான பேரன்பு
வரமே தான் எனக்கும்;
கருவிலே தொடங்கியது
இறுதிவரை நிலைக்கும்;
யாழின் இசைக்கு மொழியிருப்பின்,
அதிலியற்றிய கவிதை நீ;
சுவாசமாய் நீயாக
சட்டென காதல் கொண்டேன்.


-


13 MAY 2019 AT 7:22

எழுத்துப் பிழையாய் நான்!

-


5 DEC 2017 AT 20:09

பனி படிந்த கண்ணாடியில்
எழுதினானோ என் விதியை;
வெயிலிலும் காய்கிறது,
மழையிலும் அழிகிறது!

-சென்னை

-


4 FEB 2017 AT 21:54

மழைக்கால கார்மேகம், கூந்தலின் உவமையாம் அன்று;
தெரியுமா அவர்களுக்கு,
புற்றுநோயின் புரிதலால்
வெயில் காலத்தையும் ரசிக்க முடியும் என்று...

-


7 DEC 2018 AT 11:35

Try to manage
the empty area in your mind,
which divides the magnitude
of your positive force;
in order to avoid getting pressured!

-


Fetching Kavipriya MarKy Quotes