தீமையின் தீயில் கருகிய என்னை,
சினம் கடிந்து சிதைத்தது யாரோ?
சிதைத்தவன் என்னுயிரே ஆக,
சிரிப்பினில் சிதையும் உடலட
தீதுக்கோர் நன்மை உண்டேனில்
விட்டுச்செல்வேன் நன்மையை உன்னிடம்,
திருந்திடு...-
அதிகாலை செவ்வானம் விரிந்திருக்க,
கைகள் இரண்டும் தேனீர் குவளை பிடித்தபடி,
கண்கள் இரண்டும் காற்றில் அசையும் நெற்கதிரை பார்த்தபடி,
அதிகாலை மழைச் சாரல் தேனீரில்
கலந்துவிட,
இயற்கையின் மடியில் தேனீர் அறுந்திட ஆசை...-
கண்ணிமைக்கும் நேரத்திலே
கருவறுத்த காமர் கூட்டம்,
நீ சிந்தும் கண்ணீரின் ஈரம் கண்டும்
கல்லாகி போனதென்ன,
மானுடல் வகையிலே
தவறி பிறந்த கல்வனே,
உனை கருவறுக்க காத்திருக்கும் காலமிது.
இனியும் கண்ணீர் வடித்து பயனில்லை,
நீதியில்லையேல் நீக்கப்படும் உன் உணர்சி.....
காலம் தாழ்த்தி வழங்கும் நீதிக்கு
பலன் உண்டா என்ற
சீற்றத்தில் வரிகளமைக்கிறேன்.-
நட்பிலே நனய்த்தேன் உன்னை,
நரம்பிலே முடிந்தேன் உறவை,
வாழ்க்கையோ விட்டுச் செல்லும்,
வாழ்ந்த நாள் மட்டும் கையில்.
நினைவுகளாவது நீளட்டும் நித்தம்,
நினைவுகலே என்னிடம் மிச்சம்.
-
தனிமையோடு பேசி பேசி
தலையெழுத்தே மாறிப்போச்சு,
எனக்கென்ன தலையெழுத்தா
தலை நறச்சும் தனியிறுக்க.
நாலு பேரு எனக்கிறுக்க,
நெனப்பெல்லாம் தனியின் பிடியில்...-
உறங்காமல் உலவும் மாயமடி,
விழி தேட தேவையில்லை
விடியலை காண விருப்பமில்லை,
நீலும் உறக்கம் உந்தன் நினைவில்,
நீ இல்லா உறக்கத்தில்
உயிரும் உறங்கிப் போகும்,
மண்ணுடன் உடலும் உறங்கிவிடும்-
வைகறை நெருங்கும் தருணம்,
கடிகாரம் காதில் நொடிக்கும்
நீர் தெளிப்பில் வாசல் நனய,
என் அம்மா கோலமிடும்.
வயக்காட்டில் நெல்லிறைக்க
என் அப்பா விரைந்துவிட,
காகமெல்லாம் காத்திருக்கும்.
நித்தம் அரங்கேரும் உறையில்
நான் விழிப்பேன் அதிகாலை...-
சாரல் காற்று வீசும் நேரம்
அந்நி மங்கும் மஞ்சள் வானம்
ஊர் செல்லும் ஊர்தி கண்பட,
இரவின் ஜன்னல் நான் பிடிக்க,
ஏதேதோ எண்ணங்கள் வந்துபோக,
தலை மட்டும் ஜன்னல் மடியில்,
மழைச் சாரல் முகம் நனய்க்க,
மாடு கட்டி என் மாமன் அங்கிருக்க,
மாட்டு வண்டி கட்டிக்கிட்டு
நய்யாண்டி பேச்சுடன் வீடு செல்லும்
- விடுமுறை நாட்கள்...
-
உதிரவிட்ட உன்
கவி மலரை,
உயிர் கொடுத்து
கரை சேர்க்க,
உன் இதயம் என்னும்
கவி மலரை
நரம்பெடுத்து நான்
தொடுக்க, என்
நாடி துடிப்பிலே
மலருமடி....-
செங்காட்டு மண்ணுல
செருப்பு ஏதும் இல்லாம,
மாடு ரெண்டு மல்லுக்கட்ட,
அத மறிக்க நானோட,
காலு ரெண்டு ஏர் மிதிக்க
கையி ரெண்டு கையிர் பிடிக்க
நாலு காலு பாய்ச்சல் ரெண்டு
ஏர் இழுக்க, கை ஒன்னு முத்திறைக்க...
சோளக்காட்டு தண்ணி பாய்ச்சல்
அத்துமீறி பொளி கடக்க
நானோடிப் போவேனோ
பொளி வெட்டி பாத்தியிட...
-