எத்தனை
உறவுகள்
அருகில்
இருந்தாலும்
கண்ணீர்
துடைத்து
நான்
இருக்கிறேன்
என்று சொல்ல
மட்டும்
ஒரு உறவும்
அருகில்
வருவதில்லை
காசும்,சுயநலம்
மட்டுமே
பெரிதென
நினைத்து
ஒதுங்கி
கொள்கிறார்கள்......-
உன் கோபப் பார்வைக் கண்டு உனை
வெறுத்த நாட்கள் உண்டு!!
உன் முறுக்கு மீசைக் கண்டு பயந்து
நடுங்கிய நாட்கள் உண்டு!!
எனக்காக நீ தரித்த வேடங்களில்
இவையாவும் ஒன்று என உணர்ந்த
தருணம் என் அருகினில் என் மகன்?!
என் சுயநலத்துக்காக அவன் முன்
நானும் இன்று ஒரு வேடதாரியாய் !!
-
சிறிதளவும் சுயநலம் இன்றி
என்னைக் கொண்டாடும் நண்பன்!
அதனாலே அவன் நட்பின் மீது
உரிமை கொண்டாடும்
சுயநலவாதி ஆகிறேன் நான்!-
தானாக ஆறுதல்
அடையும் மனமே
தேக்கு போன்ற
உறுதியை பெரும்..
பிறரின் ஆறுதலால் தேற்றிக்கொள்ளும்
மனம் அடுத்தடுத்த
துக்கத்திற்கு
பிறரையே எதிர்
நோக்கி பலவீனம்
அடையும்..-
"என் சுயநலத்தால்
நம் காதலை இழந்தேன்
உன்னையும் இழந்தேன்"
"உன் சுயநலத்தால்
என் சுயநினைவு இழந்து
நான் செல்கிறேன்
வேறு ஒருவன் கூட"-
கோடிட்ட இடங்களை நிரப்புவதைப் போல்
என் தனிமையை நிரப்ப வரும்
உன் நினைவுகளிடம் இருந்து தப்பிக்க
எப்பொழுதும் ஏதேனும் வேலை செய்து கொண்டிருக்கும் எனது சுயநலம்
கடின உழைப்பாளி நானென்ற
ஊராரின் புகழ்ச்சியில் புதைந்து போனது.
-
இன்று என் பிறந்தநாளாக இருக்குமோ?
என் பிறந்தநாளை
என் தந்தையும் சொல்லவில்லை
என் தாயும் சொல்லவில்லை
ஏன்னென்றால்,
என் தாய் தந்தை யார் என்பதைக் கடவுளும் சொல்லவில்லை!
ஆனால், இவர்களின் சுயநலத்தால் பிறந்த என்னை அனைவரும் அனாதை என்று சொல்லி விலக்குகிறார்களே,
இது அவர்களின் அறியாமையா அல்லது என்னுடைய விதியா?
-
சுற்றும் பூமிக்குள்ளும் சுயநலம் உண்டு??! தன்னைத் தானே முதலில் சுற்றிக்கொண்டு தான் பிறகு சூரியனைச் சுற்றும்!!
பொதுநலத்துக்கான ஒவ்வொரு புரட்சியும் சுயநலம் என்ற ஒரு சிறிய புள்ளியில் இருந்து தான் வெடிக்கும்!!
Nandhini Murugan
-
தன்னலம் கருதுவோர் பிறர்நலம் அறிவதில்லை..
பிறர்நலம் கருதுவோர் தன்னலம் பார்ப்பதில்லை..-