தொட்டாலே அழிந்துவிடும்
மெல்லிய ஊஞ்சலில்
விழாமல் ஆடுகிறது சிலந்தி-
Doctor: In this young age how did you get heart attack?
Patient: I binge-watched a mega serial mistaking it to a web series doctor.-
எவரிதில் கடவுள் என்பீர்
எதிரினில் வாராக் கடவுள்
மனிதரின் ரூபம் கொண்டு
மண்ணினில் பிறந்தாற் போல
வந்ததைப் பாரும் தானே
வளர்ந்தவன் இவனே ஆவான்
எனயெவர் தோன்று கின்றார்
எதிரிலே யாரும் இல்லை
ஒருகணம் இருக்கும் வெய்யில்
ஒருகணம் இருப்ப தில்லை
மறுகணம் வெய்யில் ஓடி
மறைந்திடும்; முகிலில் ஒளியும்;
ஒளியிடம் ஒளியும் தன்மை
ஒருகதை சொல்லும் உண்மை
அரக்கனில் அரங்கன் உண்டு
அரைக்கணம் நினைக்கும் போது-
ஒரேயொரு தோசையை
முழுதாக வட்டவடிவில் சுட
பதினைந்து நாளாம் கடவுளுக்கு-
வேலைக்கு நேரமாச்சு
கிறீச்சிட்டு நேராகப் பாய்கிறது
காலையில் பறக்கும் கிளி-
மரங்கொத்தி ஒன்று
எல்லோரும் பார்க்கையில் இருந்ததே
இப்போது எங்குப் போனது-
எந்திரன் படத்தில் க்ளைமேக்ஸில் எல்லா ரோபோக்களும் பெரிய பந்து போல் ஃபார்மேஷன் செய்வது பார்க்க கொரோனா மாதிரியே இல்லை?
-
எங்க பார்த்தாலும் கருத்துருக்குது.
இல்ல பாஸ் காலையில எப்புடி கருத்து இருக்கும்
நா அந்த கருத்த சொல்லல வேற கருத்த சொன்னேன்
வேற எந்தக் கருத்த சொன்னீங்க
எங்கப் பார்த்தாலும் கருத்து இருக்குது
பாஸ் கண்ணு போய்டுச்சா
நான் சொல்ற கருத்து வேற கருத்து
சரி அதுதான் என்ன கருத்து
விவேக் கருத்து சொல்லிட்டிருந்தாரு
ஏன் செவந்து சொல்லலயா
இப்படியே போனா நான் பச்சையா சொல்லிடுவேன்.
வேணாம் பாஸ் கருத்தே சொல்லுங்க
எங்க பார்த்தாலும் கருத்துருக்குது.
விவேக் சொன்ன கருத்து அப்படிதான.
ஆமாம்.-
சிகப்பாய் சிறப்பாய் தமிழ்ப்பெண் என்றேன்
சமந்தா என்றதைப் படைத்தேன் என்றான்
கருப்பாய் தமிழ்ப்பெண் களையாய் என்றேன்
நிவேதா என்றொரு படைப்பு என்றான்
சரி மாநிறம் ஆனால் மான்நிறம்
என்றேன்
வேறு மாநிலம் அதன் பேரு பூஜா என்றான்
அழகுடன் அன்பாய் அறிவாய் என்றேன்
அடடா அதையேன் மறந்தேன் என்றான்.-