Daughter or Son? It doesn't matter..
"Never sacrifice your parents who sacrificed their life to make your life better than them "
Say NO to old age home!-
உலகெங்கும் உன்னை
தேடி அலைந்தேன்
ஓர் நாள் உன்னிடம்
சரணடைய.
எனக்குள் நீ
மறைந்திருப்பதை
உணர்ந்தேன்
நான் யார் என
தெளிந்தேன்.
நம சிவாய!!-
பெண்ணின் மனம் கருமை என்றார்கள்.
ஆம்..! கோவிலில் குடியிருக்கும் சிற்பம் போல்.
பெண்ணின் மனம் கல் என்றார்கள்.
ஆம்..! செதுக்கிய தெய்வமாய் தோன்றி அருள.
பெண்ணின் மனம் வேஷம் என்றார்கள்.
ஆம்.! பிறர் மனம் நோகாமல் நடக்க.
பெண்ணின் மனம் அழுத்தம் என்றார்கள்.
ஆம். ! அறிந்தும் காலம் கனிய.
பெண்ணின் மனம் ஆழம் என்றார்கள்.
ஆம்.! துன்பங்களை புதைத்தும் சுற்றம் இன்புற.
பெண்ணின் மனம் கசப்பு என்றார்கள்.
ஆம்.! தீராத உன் பிணிக்கு மருந்தாக.
பெண்ணின் மனம் அடிமை என்றார்கள்.
ஆம்.! என்றும் நீ தலைவனாய் திகழ.
பெண்ணின் மனம் மௌனம் என்றார்கள்
ஆம்.! உன் குரலைக் கேட்க்க. பெண்ணின் மனம் இருள் என்றார்கள்.
ஆம்.! என்றும் நீ தீபமாய் ஒளிர.
பெண்ணின் மனம் முதுமை என்றார்கள்.
ஆம்.! என்றும் உனக்கு அன்னையாய் திகழ.
-
என் வாழ்க்கையில் ஒரு பகுதி அல்ல ;
என் வாழ்க்கையாகவே மாறியது உங்கள் இசை;
அதன் வரிகள் அதனை ஒலிக்கும் உங்கள் குரலும்;
இன்பத்தில் தத்தளித்த போதும்
அமைதியில் முழ்கியபோதும்;
என் உயிரோடு கலந்தது..
நெடுஞ்சாலை பயணங்களில்,
தனித்து செல்லும் இருள் சூழ்ந்த சாலைகளில்,
துணை தேவையில்லை உன் குரல் கேட்கும் வரை;
தூங்காத விழிகளுக்கு தாலாட்டாக ;
விழிகள் வடிக்கும் கண்ணீருக்கு துடைக்கும் கரங்களாக;
சோர்வடைந்த மனதுக்கு பாலமாக ;
பேச நினைத்த வார்த்தைகளும்
வெளிபடுத்த முடியாத உணர்ச்சிகளுக்கும்
உயிர் தந்தது உன் குரல் தான்..
ஆறுதல் அளிப்பவர்
அரவணைப்பவர் கடவுள் என்றால் நீயும் இன்று கடவுள் தான்..
என்றும் இதயத்துடிப்பின் ராகமாக எனக்குள் நிலைத்திருப்பாய்!-
தனிமை
கருவறையில், கல்லறையில்
உணர்வதில்லை !
இடைப்பட்ட வாழ்க்கையில்
சில மனிதர்களால் மட்டுமே ..-
Yes! I'm made fun for my appearance
Yes! I'm blamed for their mistake
Yes! I'm made fool for my childishness
Yes! I'm not appreciated for true affection
Yes! I'm not given a chance to share my side
Of course! I'm an emotional idiot and
may be closed eye puppet..
Between! I reliazed that they had me as an option
And now I gave them only option
to lose someone who love them hard...-
ஏமாற்றப்பட்டால் மனம்
வருந்தாதே!
வருத்தப்பட வேண்டியதும்
அவமானப்பட வேண்டியதும்
உன்னை ஏமாற்றியவரே!
"உன்னை நினத்து"-
நம்மிடம் சிரித்து பேசி நீண்ட உரையாடுபவர் நம் நலன் அல்லது நம் நிலை பற்றி அறிந்து ஆறுதல் அளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை..
அவர்களின் நட்பு நலம் உள்ள வரை தான்..
சிரித்து பேச தெரிந்த நமக்கு சிந்திக்க தெரியாமல் போகிறது..
அவ்வாறு உதாசீனப்படுத்துவது அவர் குற்றமா
அல்லது
இவ்வாறு காயப்பட்டது இவர் அறியாமையா..-
You call a person nice sometimes when they don't care for you or when they don't want to know how you are doing and what you need..
But they just want to be connected with you without knowing what is real about you..
They just want to be connected but not to get continued..-
Heart is full of scars and betrayal which doesn't come from strangers..
We deserve a betrayal or scar only when we start to trust blindly..
We don't even stab back somepeople when you see them happily aournd after betraying you..
Good gift of betrayal is.. You start doubting everyone around..-