Nandhini Murugan  
1.8k Followers · 141 Following

தமிழச்சி...!!
Joined 24 May 2017


தமிழச்சி...!!
Joined 24 May 2017
21 NOV 2021 AT 0:32

இரவுகள் எல்லாம் கறுப்பாகவே
கடந்து கொண்டிருக்கப் பின்
அந்த நிலவுக்கென்ன வேலை..!

-


20 NOV 2021 AT 1:52

முகம் தெரியாத யாரோ ஒருவரின்
வீட்டு தெருவில் வண்டியோட்டி
கடக்க முனையும் நொடி
பற்ற வைத்தும் வெடிக்காத
பட்டாசுக்காய் பயந்து
"அண்ணே! பாத்து நே
பட்டாசு" எனப் பதறும்
கபடமற்ற சிறுவனின்
கைகளில் வாழ்க்கை அப்படியே
நின்றிருந்திருக்கலாம்....!


- Nandhini Murugan

-


20 NOV 2021 AT 1:33

தேநீர் இடைவேளையில்
தொடங்கி இடைவெளியே
இல்லாத தேநீர்
விருந்தானது
அவளுடனான
என் வாழ்க்கை....!


- Nandhini Murugan

-


20 NOV 2021 AT 1:24

நிச்சயம்
நிச்சயமானவை பட்டியல்
தெரிந்திருந்தால்
நீண்டிருக்காது என்
எதிர்ப்பார்ப்புகள்....!

-


20 NOV 2021 AT 1:12

யாரோ ஒருவரின் காதல்
கதையைப் படித்த அந்த நொடி
ஓராயிரம் மைல் தூரத்தில்
கடல் கடந்து உறங்கும் உன்
கைகளில் என்னை கொண்டு
சேர்த்து விட்டது இந்தப்
பொல்லாக் காதல்...!

-


7 NOV 2021 AT 7:26

என் வானம் வரைய
நான் தேடும் நீல
வண்ணம் நீ......
தீட்டி முடித்தும்
தீராத காதல்
எண்ணம் ஏன்?!


Nandhini Murugan

-


8 AUG 2021 AT 15:19

காற்றினால் அசையும் மரத்தின்
இலையொன்று உதிர்ந்து பிரிந்தும்
சருகாகி மீண்டும் மரத்தைச்
சேரத் துடிக்குமெனில் அதற்கும்
காதலென்று பேர்..!



- Nandhini Murugan

-


8 AUG 2021 AT 14:59

நிஜத்தின் மீது நம்பிக்கை
இழக்கும் அந்த ஒற்றை நொடி
நிச்சயம் நீயும் கவிஞன் ஆகியிருப்பாய்..!


- Nandhini Murugan

-


8 AUG 2021 AT 14:51

நான் தனியே வரைந்திட்ட
நம் பக்கங்களில் எல்லாம்
நிச்சயம் ஒரு துளி கண்ணீர்
மிச்சமிருக்கும் உன் நினைவுகளோடு!


- Nandhini Murugan

-


14 MAR 2021 AT 16:45

அவனோடான பயணங்கள்
அளவானவையாக வாய்த்தும்
ஆழமானவையாக......!

-


Fetching Nandhini Murugan Quotes