QUOTES ON #விடுதலை

#விடுதலை quotes

Trending | Latest
17 JUN 2021 AT 13:06

கழுகுகளும்
பருந்துகளும்...
கறைகளையும்
கனல்களையும்...
கக்கிக் கொண்டிருக்க
தகிக்கும் தணல்களுக்கும்
சூறையாடப்படும்
சுதந்திரங்களுக்கும்
எதிராக ...
விடுதலை விரும்பி
ஆவேசம்
கொண்டெழுந்துபறக்கின்ற
அக்கினிக் குஞ்சு
நானாவேன்!!!!

-


1 SEP 2018 AT 19:42

அடுத்தவரின் பார்வைக் கூட்டுக்குள்
அடைப்பட்டுக் கிடக்கும்
அத்தனைப்பேருக்கும்
விடுதலை என்பது இரக்கமற்றச்
சொல்லே!!!

-



உன்
கருவறையில் இருந்து
நீ விடுதலை
கொடுத்ததும் தான்
உணர்ந்தேன்...!
நான்
சிறைப்பட்டது
உன்
கருவறை அல்ல
இச்சமூகமே....!

💞க.கொ.மணிவேல்...🖋️

-


5 FEB 2022 AT 9:02

சர்க்கரை டப்பாவுக்குள்
சிக்கி திணறிக்
கொண்டிருந்தது
ஒரு சிலந்தி

பாவமாக இருந்தது

குழிக்கரண்டி உதவியுடன்
எடுத்து வெளியில்விட
படு வேகமாக
போயே போய்விட்டது

இப்போது
பொறாமையாக இருக்கிறது !— % &

-


15 AUG 2020 AT 17:49

சுதந்திர வேட்கை..

இன்னமும் உள்ளது..!

விடுபட்டுப் போன..

விடுதலையின்,

நூலிழையில்..

சிக்கித் தவிக்கும்,

இந்த மாதருக்கு மட்டும்..!

-


28 SEP 2018 AT 9:53

விடையில்லா உன்
விழி வினாக்களுக்கு
விடை தேட சொல்கிறாய்,
விடையளிக்க தவறிவிட்டால்
விடுதலை வேண்டாம்!
தண்டனை உன்
இதயச்சிறையில் என்றால்..,

-



உன் மனசாட்சியின்
விருப்பப்படி தான்
அமையும்..❤️

-


26 MAR 2022 AT 8:54

சில விடுதலைகள்கூட
தண்டனை தான்...

பறக்க மறந்த
பறவையை
கூண்டிலிருந்து
விடுவிப்பதைப் போல !

-


17 JUN 2021 AT 15:20



விடுதலை விரும்பி நாம்


-


29 JAN 2020 AT 19:11

விட்டு
விடுதலையாகிடச்
சொல்லி
நம்பிக்கை
தருவது
பெரும்பாலும்
விலங்கிட்ட
கைகளே !!

-