தனிமை என்பது வலிபோன்றது
வலிக்க வலிக்க
மீண்டும் எதிர்பார்க்கிறேன்!!
போதைகள் அப்படித்தான்!!-
மேலும் அறிய
#yqinterviewtamil #ச... read more
ஒத்திகைகளை ஓராயிரம் முறை செய்து விட்டேன்!!
விட்டுப் போன சில வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை சேர்த்து விட்டேன்!!
சட்டென்று உடைத்து விட எண்ணியே சபதமும் எடுத்து கொண்டேன்!!
இந்த நிமிட உணர்வு கடந்த ஒரு நாளை உன்னுடன் நான் இணைய கனா ஒன்றை கற்பனைக்குள் அடைத்தேன்!!
இத்தனை முயன்றும் ....
நீ எனை பெயர் அழைத்து பேசும் போது
தண்ணீர் வற்று சுவாசம் துடிக்கும் மீனாகிறது
என் நாக்கு!!
தேடிய உன் கண்கள் எனை தேடும் போது எதையோ தேடும் பார்வையாகிறது என் பார்வை!!
சொல்லாதிருக்கும் ஒவ்வொரு பொழுதும் தொலையாதிருக்கிறது உன் நினைவு!!
-
அழகாய் தலைக்குளித்து
மல்லிப்பூ சூடி
துவைத்த துணி உடுத்தி
நகரக் குப்பைகளை அள்ளுகிறாள்!!
அவளுக்குத் தெரிந்தது கூட எனக்கு தெரியவில்லை!
மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை!!
-
இழக்கவோ இருக்கவோ
எதுவுமில்லை
என்பவனுக்கு மட்டுமே
இனி எதுவுமே துயரமில்லை!!
ஏனெனில்
பறவைகள் மட்டுமே அழுவதில்லை!!-
வெளிச்சம் என்பது இரவுகளுக்கும் பிரபஞ்சங்களுக்கும் இடையே இருக்கும் சிறு "கமா"
வேடிக்கை என்னவெனில் மனித
வாழ்வின் பெரும்பகுதி "கமா" க்களில் அடங்கியிருக்கிறது!!-
வெற்று உடம்பு கிடத்தப்பட்ட பின்
கடைசியா பாக்றவங்க பார்த்துக்கோங்க என்றவருக்கு தெரிய வாய்ப்பில்லை
கடைசியாக அவர் இருக்கும் போது
அழுததை யாருமே பார்க்கவில்லை
என்பதுதான் மனிதம் என!!-
புத்தனாக ஒரு நாள் இருக்கலாம்
என்றே அருகிலிருந்த
தென்னை மரத்தின் கீழ்
அமர்ந்தேன்!!
அங்கே வந்த புத்தன்
ஏன் இந்த முட்டாள்தனம்?! என்றான்!!
சிறுக சிறுக மாறுவதை விட
மொத்தமாக மறைந்து விடலாம் என்றேன்!
புத்தன் பேசவே இல்லை!!
-
தயவு செய்து பேசி விட்டுப் போ
நீ பேசாத பேச்செல்லாம் என்
மூளைக்குள்ளே கேட்கிறது!
பைத்தியமா எனக் கேட்கவாவது செய்
பிறழ்ந்தவனுக்குத் தேவை கேள்வி அல்ல
ஆறுதல்!-
தனித்து விடப்படாமல்
தனியே இருப்பது என்பது
சுகம்!
நீங்கள் குளித்தீர்களா?
சாப்பிட்டீர்களா?
ரசித்தீர்களா?
இருக்கிறீர்களா?
யாருக்கும் நிரூபிக்க வேண்டாம்!!
மதிப்பிடாத
மறுதலிக்காத
மனம் நோகாத
வார்த்தைகளற்ற
நேர சிறைக்குள் அடங்காத
நாட்களற்ற
தீப்பற்றி எரியும்
நினைவுகளோடு
குளிர்காய வைக்கும்
விருப்பங்களின் தனிமை!!-