விண்ணிறங்கி வரும்
வெண்ணிலவை
மலர்கள் வரவேற்க
காத்திருக்கின்றன-
விடியலை
மாற்றம்
செய்ய
வந்திருக்கும்
ஆதவனை
வரவேற்கின்றன
பூக்கள்
தோரணங்களாய்
அலங்கரித்து
வணக்கங்களை
சொல்லுகிறது-
கடையை சாத்தும்
கடைசி நொடி வரை
வாசல் வருகை பதிவேட்டை விட்டு
விலகுவதாக இல்லையென்று
உறுதியாக பயணித்த
உடன்பிறவா சக கவிகள்
அனைவரின் சார்பாகவும்
தலைப்பு தாரகை கண்மணிக்கு
சந்தன வணக்கங்கள்🙏🙏
-
உன்னை முன்னிலைப்
படுத்தி நான்
கூறும் பொய்களுக்கு
எப்போதும் வரவேற்பு
அதிகம் தான் !
-
ஒவ்வொரு முறையும்
என் வருகையை
அறியாமல் இருந்தும்
என்னை வரவேற்க
தவறியதில்லை..!
அலைகள்-
வாழ்க்கையில் வரவேற்புகளை விட
எதிர்ப்புக்களை சம்பாதிப்பாயானால்
கூறியதை கூறும் கிளிப்பிள்ளை போலன்றி
நீ நீயாகவே இருக்கிறாய் என அர்த்தம்-
நீண்ட நாள் கழித்து சொந்த ஊர் திரும்பலும்
மழைத்தூரலாக இயற்கையின் வரவேற்பும்
மனிதன் எதிர்பார்த்திடும் வரவேற்பின் உச்சங்கள்.-
நன்றி சொல்லி வழியனுப்புவோம்..
காலம் அது நம்மை கடந்து கொண்டே செல்லும்..!
நேரம் நம்மைத் துரத்திக் கொண்டே செல்லும்..!
காலத்தையும் நேரத்தையும் ஒன்றாக்கி..,
ஒரு உயிர் தருவது போல் ஒவ்வொரு வருடமும் ஒரு புது வருடம் பிறக்கிறது..
இன்பம் துன்பம் இது காலத்தின் கட்டளை...
"பரிணாம வளர்ச்சியில் காலத்தை வெல்வோம் என்று நினைத்து நாமே அதை அழித்துக் கொண்டிருக்கிறோம்..."
மனித வாழ்க்கைக்கு பிறப்பு இறப்பு எவ்வாறு இன்றியமையாததோ அவ்வாறு காலத்திற்கும்..!
கடந்த வந்த பாதையை என்றென்றும் மறக்க இயலாது அது தர்மம் ஆகாது...
ஆகையால்
2022 ஆம் ஆண்டை நன்றி கூறி வழியனுப்புவோம் நன்றி உணர்வோடு......-
எதனால் நிராகரிக்கபட்டாயோ ?
எதனாலோ வரவேற்க்கபடுவாய் மற்றவரால் /-