சில்லென்று வானிலை...
பூத்தூறல் போன்ற மாமழை...
சாலையில் பலரும் நனையாமல் இருக்க இடம் தேடிக் கொண்டிருக்கையில்,
ஏனோ எனக்கு மட்டும் குளிரவில்லை,
உள்ளே ஒரு லட்சியத் தீ எரிந்துக் கொண்டிருப்பதால்....
-
சிறகு ஒடிந்து பறந்த அந்த..
பட்சியின் விழிதனில்..!
தடம் மாறாமலும்..
தடுமாறாமலும்..
பதிந்திருந்தது..!
அதன் குறிக்கோள்..!-
இன்று வாய்விட்டுச் சிரிப்பவரெல்லாம்
நாளை வாயடைத்து போகும் வண்ணம்
வரலாறு படைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொள்...
-
மண்ணை தோண்டி புதைத்தாலும்
விண்ணை நோக்கி
வளரும் விதை போல
உன்னை இகழ்வாய் பேசினாலும்
அலட்சியம் காட்டிவிட்டு
லட்சியத்தை வெற்றிகொள்-
,
கனவுகளைத் தொலைத்தவளாக இல்லாமல்,
என் இலட்சிய கனவுகளில் தொலைந்துப்போக ஆசை.-
காலத்தின் பிடியில்
கடிகாரம் சுழன்று
கொண்டிருந்தாலும்
காலம் சுழன்று
கொண்டிருப்பதில்லை
நம்பிக்கையுடன்
நகர்ந்து செல்லலாம் ⛳
-
நம் கனவுகளும், ஆசைகளும்
மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்
கேலி பேசவும், சாடி பேசவும்
மட்டுமே அறிந்த கூட்டம் அது
லட்சியங்களை நெஞ்சினில்
விதைத்து விட்டால்
விருட்சமாக வளர அதுவே நீரூற்றும்-