ஆற மறுக்கும் சில காயங்களையும்
ஆற்ற மறுக்கும் சில காரணங்களையும் தவிர்க்க முடிவதே இல்லை...-
First cry on Dec 18🎂
Instagram : tamil_kavini
அந்த ஒரு நாள்
அந்த ஒரு நொடி
அந்த ஒரு நிமிடம் யோசித்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது என்று எண்ணாத நாட்களை கணக்கில் கொள்ள முடியாமல் கனம் கொள்கிறது என் நாட்கள்...-
சில துரோகிகளையும்
அவர்களின் துரோகங்களையும்
தாண்டிச் செல்ல முடிவதுமில்லை
தாங்கிக் கொள்ள முடியவுமில்லை...-
அடங்க மறுக்கும் கண்ணீரையும்
அடக்க முயலும் கவலைகளையும்
வீண் எனத் தெரிந்தும்
வீராப்பாய் சில கோபங்களையும்
விட்டுவிட எண்ணும்போதெல்லாம்
விதியை மட்டும் நொந்துக்கொள்கிறேன்
விடுவித்து விடுவாயா இல்லை
விடைபெற்று விடுவாயா என்று?-
தனக்கு வேண்டும் என்ற பொழுது
நம்மை கண்டு கொள்பவர்கள் தான்
தனக்கு வேண்டாம் என்ற போது
நம்மை கண்டும்
காணாமல் சென்று விடுவார்கள்...-
உன்னைக் காணாத பொழுதெல்லாம் கண்டுகொள்கிறேன் உன்னை என்னிடத்தில்...
-
திட்டித் தீர்க்க தான் முடியவில்லை
ஆகையால் கொட்டித் தீர்க்கிறேன்
என் கவிகளின் வழியே
உன் மேல் கொண்ட காதலை...-
வெற்றி
தொட்டுவிடும் தூரத்தில் நீ
இல்லை என்றாலும் எட்டிப் பிடிக்கவே
முயல்கிறேன் எட்டாக் கனி என்று உரைத்தவருக்கு நீ கிட்டும் கனி என்று உணர்த்தவே...-
செக்கச் சிவந்த வானம்
சிலிர்ப்படைந்து மழையாய்
பொழிகிறது என்னவனின் வருகையால்...-
சிரித்துக்கொண்டே கடக்கிறேன்
சில நிமிடங்களை
சில மனிதர்களை
சில நாட்களை
சில தருணங்களை
சிந்தித்தும் பயனில்லை என்று தெரிந்தபின்...-