தூவிச்சென்ற
தீயின் துளிகள்
மௌனங்களில்
மாய்த்துக்கொள்ள
மொழிபெயர்ப்புகள்
அவசியமின்றி
முத்தங்கள் மட்டுமே
மழையானதோ!-
மழையாய்
பொழிந்துவிடு
இதழ் முத்தங்களை..!
ஈரம் கொண்டு
இயற்றுகிறேன்
புதுக் கவிதைகளை..!-
சிந்திச்
சிதறினாலும்..,
சிதறித்
சிந்தினாலும்..,
நனைக்கவே
செய்கிறது..!
நின்
முத்தங்கள்..!
❤
'மழை'-
உன் ஒருவனிடத்திலாவது
துணிந்து கூறிவிட்டேன்..
விரும்பி பெற்றும் கொள்கிறேன்..
காதலெனும் மாய விளையாட்டை
உன் முத்த மழையில் நனைந்து...
காயம் என்பது உண்டு தான்..
என்றோ ஓர் நாள்
இருவரில் ஒருவருக்கு
முன்னிலையில் என்றாலும்..
நிகழ்காலத்தின் அழகை
அனுபவிக்க தயங்கி
நம் வாழ்நாள் முழுதும்
சுமையாய் ஏற்றிட
மனமில்லையடா எனக்கு..
நிச்சயம் உரைத்திட மாட்டேனடா..
இவையாவும் நாம்
செய்யும் பிழையென..
ஏனெனில் இவை நம்
விதியின் தவறு..
சான்றோர்களின் பிழை மட்டுமே..-
நீ இல்லாத இரவெல்லாம்
உன் சுவாசக்காற்று நிரம்பிய
தலையணையுடன் சண்டையிடுகிறேன்
அது உனை போல எனை உச்சிமுகர்வதில்லை..-
உன் இதழோடு பேச எத்தனிக்கையில் தான் முத்த பாஷைகள் மறந்து போகிறது. நினைவு படுத்தவாவது இன்னும் கொஞ்சம் நெருங்கி தொலையேன்டி...
-
இறுக்கி பிடித்து
இரக்கம்யின்றி கட்டியிழுத்து
நீ இட்ட முத்தத்தில்
முட்புதற்றுகுள் சிக்கிக்கொண்ட மலராய்
உன் தாடிக்குள் சிக்கிக்கொண்டு
தாமதமாய் வந்ததற்கு
தண்டணை அனுபவித்தேன்
சுகமான உன் தீண்டலில்
இதமான உன் இதழ்களை சுவைத்தபடி-
ஹைக்கூ..
இங்கே குடைக்குள்
பொழிந்துகொண்டிருக்கிறது
முத்த மழை!
-