𝙎𝙝𝙖𝙣𝙠𝙖𝙧 𝙈𝙖𝙖𝙣𝙟𝙞 𝙋𝙞𝙡𝙡𝙖𝙞 ✍️   (𝙎𝙝𝙖𝙈 🏹)
725 Followers · 172 Following

Joined 18 October 2019


Joined 18 October 2019

நேசத்தின் அ ழ கு
பாசத்தின் மொழி
மழலையின் மூலம்
நன்கு உணரலாம்!

-



உன் கதையில் என்னை நாயகனாக
சித்தரிக்கவில்லை யென்றாலும்
பரவாயில்லை, ஆனால் வில்லனாக
சித்தரித்துவிடாதே ஒருபோதும்!

-



என் இதயக் கூட்டில்
நீ வசிக்கும் போது
எப்போதும் உனக்கு
நல் உதயம் தானே

-



விளக்கணைக்கும் நேரமாகியும்
வரவில்லையே அவன்
கண் இமைக்கும் நேரத்தில் கூட
காத்திருப்பு நரகமானதே!

தெரு முனையில் அவனைத் தேடி
இரு விழிகள் அலைகிறதே
இங்கே ஓர் உயிரும் காத்திருக்க
எங்கே சென்றான் அவன்?

-



ஆழ்கடலில்
மூழ்கியவனுக்கே தெரியும்
அவன் தேடல்
முத்து ஒன்று மட்டுமே என

-



புல் மீது படர்ந்த
காலை பனித்துளி போல்
மனதில் படர்ந்தது
அவள் மீதான நினைவுகள்

-



நீ செல்லும் பாதையில்
நிலவும் வழிகாட்டிச் செல்லும்
நிழலாய் அதன் ஒளியும்
நிற்காமல் தொடர்ந்தே வரும்.!

-



மஞ்சள் நிலவொன்று - மரத்தடியில்
தஞ்சம் அடைந்துவிட்டதேனோ?
கொஞ்சிப்பேசிடும் அவன் இன்னும்
வஞ்சியை காண வரலையோ?

-



ஹைக்கூ..

கடிகார முள்ளின் சத்தம்
நன்றாக கேட்கும்படி செய்கிறது
இரவின் நிசப்தம்!

-



சேகரித்து வைக்க
அன்பு ஒன்றும் பணமல்ல!
அடைத்து வைக்க
அவை பொருள்களுமல்ல!

கொடுப்பதற்கே
செலவழிப்பதற்கே அன்பு!

-


Fetching 𝙎𝙝𝙖𝙣𝙠𝙖𝙧 𝙈𝙖𝙖𝙣𝙟𝙞 𝙋𝙞𝙡𝙡𝙖𝙞 ✍️ Quotes