-
ஒவ்வொரு முறை இட்லி
பொடி இடித்து டப்பாவில்
அடைத்து வைக்கும் போதும்
"என்ன தான் பாத்து பாத்து
இடிச்சாலும் உங்கம்மா செய்யற
மாதிரி வரவே மாட்டேங்குது. ஒரு
வாரம் வீட்டையே சுத்தும் வாசம்"
என்று அப்பாவிடம் அங்கலாய்க்கும்
அம்மாவின் நினைவுகளில்
சகல சௌபாக்கியங்களுடன்
வாழ்கிறார் அவரது மாமியார்...!-
மகளென மனதார பாவிக்கும்
மாமியாருக்கோ மனதளவிலும்
ஈரமற்ற மருமகள்..
தாயென தாங்கும் மருமகளுக்கோ
அவளை தாயக்கட்டை போல்
உருட்டி தாளித்திடும் மாமியார்..
மாமியாரும் மருமகளும்
விரிசலொன்று அமைத்து
விட்டுக்கொடுக்காமல்
மல்லுக்கட்டும் மல்யுத்தம்..
இரண்டும் சரியாக
தாயாயும் சேயாயும் கூடிவாழும்
ஒருகூட்டு பறவையாய் இன்னும்
சில மாமியார் மருமகள் இப்புவியில்
ஆங்காங்கே அழகாய் வாழ்ந்துக்
கொண்டுத்தான் இருக்கிறார்கள்..!!
_ இளங்கவி ஷாலினி கணேசன்-
இளமையில்
தான் அனுபவித்ததை
எல்லாம்
முதுமையில்
தன் மருமகளுக்கு
திருப்பிக் கொடுக்கிறார்கள்
சில மாமியார்கள் !!-
மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வர காரணம்...
1.அவள் வருவதற்கு முன் இவர்கள் செய்த வேலையை இனிமேல் எல்லாம் மருமகள் தான் செய்யணும் nu நினைக்கிறது....உடம்பு சரியில்லை என்றால் பரவாயில்லை ...வேண்டுமென செய்யாமல் இருப்பது...
2. மருமகள் நினைப்பது:இனிமேல் கணவர் நாம் சொல்றத தான் கேட்கணும்,...சம்பாதித்து முதலில் நம் கையில் தான் குடுக்கணும் nu நினைப்பது...-
நன்றாக. பேசிப்பழகும் பெண்கள் மணமானவுடன் மாமியாராகவும் நாத்தனாராகவும் மாறிவிடுவது என்பது... பார்க்கும் நம்மை விட படைத்த பிரம்மனுக்கே புரியாத புதிர்தான்...!
-
நான் பட்ட அத்தனை
கஷ்டங்களிலும்
உடன் இல்லாமல்
போனவர்கள்
அத்தனை காயங்களுக்கும்
காலம் கடந்த பிறகு
மன்னிப்பு என்ற ஒற்றை
வார்த்தையில்
மனம் ஆறுதல் அடையுமா.....-
மகள் அம்மா வீட்டுக்கு
வந்தா 1 வாரமானாலும்
இன்னும் 1 மாசம் இருந்துட்டு
போ னு சொல்லுவாங்க...
ஆனால் மருமகள் அம்மா
வீட்டுக்கு போனா 1 மணி
நேரத்துல வீட்டுக்கு
வந்திரனும்...
என்னம்மா உங்க நியாயம்???-
வூட்டுக்குள்ள வரும்போதே "என்னடி"னு கேக்குற புருசனும்....
வூட்ட வுட்டு போகும் போது "பத்திரம் டி"னு சொல்லுற மாமியாரும்...
போதுமடா.....சொர்க்கம்தான் நமக்கு....-
அப்படி என்னதான் ஓரவஞ்சனையோ
தெரியல இந்த மாமியார்களுக்கு
இரண்டு மருமகள்கள் இருந்தால்
ஒரு மருமகளை தலை மேல்
தூக்கி வைத்து கொண்டாடுவதும்
ஒரு மருமகளை திட்டியே கொல்வதும்...
இருவரும் வாழ வந்தவர்கள் தானே??
சமமாய் நடத்துங்கள்!!!-