யாராவது English
நல்லா பேசும் போது
நமக்கும் பேசனும்னு
ஆசையா இருக்கு!!!
ஆனால்
என்ன பண்ணாலும்
English மட்டும்
வரவே மாட்டேங்குதுப்பா!!-
உடன்பிறவா சகோதரியாய்
உடனிருக்கும் உயிர் தோழியாய்
ஆயிரம் உறவிருந்தாலும்
ஆத்மார்த்தமான என் உறவிற்கு..
அன்பினை மட்டுமே பொழியும்
அழகான மலருக்கு...
புன்னகைக்க மட்டுமே பிறந்த
புது பூவிற்கு...
எந்த ஜென்மத்து பந்தமோ
இந்த ஜென்மம் நிறைத்த நிலோவிற்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
Love you Nilo😍😍-
சிறு சண்டைகளுக்கெல்லாம்
சிதறிப் போவான்..
பெருமுயற்சி செய்து
பேச வைப்பான்..
அவன் கெஞ்சலின் சுகத்திற்காக
சண்டைகளைத் தொடங்குவேன் நான்..
கெஞ்சலோடு கொஞ்சம்
கொஞ்சலும் சேர்கையில்
சண்டைகளும் சமாதானமாகும்...
வெட்கமும் சிறிது வெட்கப்படும்..-
வாய்க்காலோடும் வயல்வெளி
வாரி இறைக்கும் தண்ணீரோடும்
தந்தையோடும் தனிமையான இரவு...
நிலவொளியின் சிறு கீற்றும்
நில்லாது ஓடும் நீரின் பாட்டும்
நிஜமில்லாத வாழ்க்கையின்
நிஜமான நினைவுகளையும்
தந்தையோடு நான் கழித்த
தரமான நாட்கள் அவை...
எத்தனையோ கடந்து விட்டேன்
எவ்வளவோ பார்த்து விட்டேன்
என்றும் பசுமை குறையாத
என் வயக்காட்டு வாழ்க்கை
எப்பொழுது கிடைக்குமோ??
தனிமையில் நான் தூங்க
தந்தையை மனம் தேட
தவித்து விழித்ததும்
தலை கோதிவிடும்
தந்தை தாயுமானவன்...
இத்தயாபரனுக்கு யாவுமானவன்...-
பல நேரங்களில்
நாம் கூறுவதையும்
மற்றவர் கேட்கலாமே
என்பது தான்
நம் பெரிய எதிர்பார்ப்பே...
அறிவுரைகள் வேண்டாம்...
அச்சப்படவும் வேண்டாம்...
ஏளனமும் வேண்டாம்...
நான் பேசுவதை மட்டும் கேள்...
நான் தனிமையில் இல்லை
என்னும் நம்பிக்கையை மட்டும் தா...-
நம் வீட்டு செல்லப் பிராணி
நமக்காக ஓடி வரும்
கால்கள்!!!
நம்மைக் காக்கவே
காத்திருக்கும் உயிர்!!!
நமக்கு ஒரு போதும்
துரோகம் செய்யாத
கைகள்!!!-
நான் கற்ற பாடம்
யாருக்கு உதவி செய்தாலும்
நமக்கு யாரும் உதவ மாட்டார்கள்!!!
யாரருக்கு உண்மையாய் இருந்தாலும்
நம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பர்!!
எல்லோருக்கும் நல்லது நினைத்தாலும்
நமக்கு நல்லது நடக்காது!!!
நன்றியை மறந்து
முதுகில் குத்தவே துடிப்பார்கள்!!!
என்ன உலகமடா சாமி இது??-
ஆடை குறைத்து
ஆபாசம் புகுத்தி
குடும்பங்களை மறந்து
தான் பெண் என்பதையும் மறந்து
வெற்று லைக்குகளுக்காகவும்
வீணான புகழுக்காகவும்
குடும்பப் பெண்கள்
சீரழுயும் நிலை
Tic Tok உடன் சேர்ந்து
அழிந்து போகட்டும் இன்றுடன்!!!
#BanTiktok-
Helo இல்லாததால்
உங்களை சந்திக்க
முடியாதென்பதால்
Jana_helo7
என்னும் insta ID யில்
என்னுடைய பதிவுகளைக்
காண பின்தொடருங்கள்!!
நன்றி!!!-