சீதாலட்சுமி வெங்கட்  
31 Followers · 8 Following

எழுத்தர்
பேரன்பும் ரௌத்திரமும்..
Joined 22 August 2020


எழுத்தர்
பேரன்பும் ரௌத்திரமும்..
Joined 22 August 2020

ஒரு கனவு இல்லம்
கனாவாக மட்டுமே
போய்விடுவது ஏனோ..

-



வரிகள் மட்டுமல்ல
இவளின் வாழ்க்கையும் கூட
இன்றும் வாசிக்கப்படாமலேயே
சபிக்கப்பட்டிருக்கிறது..
(முதிர்கன்னி)

-



மீண்டும் வந்து முத்தமிடுகிறாள்..

-



இரவுகளும் ஓட
இவள் மட்டும்
வாழாதிருந்தாள்..
இறந்து சென்ற
தகப்பனின் முகமெண்ணி..

-



இழப்புகளை விட
கொடியது நினைவுகள்

-



சம்மந்தமில்லா
சிரிப்புகளும் பேச்சுகளும் அவ்வப்போது குடும்பத்தில் இருப்பது சாலச்சிறந்தது...

இன்னமும்
நெருக்கமாய் உருக்கமாய் இருப்பதற்கான வாய்ப்பினை அள்ளித்தரும் திறவுகோல் அது..

சீதாலட்சுமி வெங்கட்

-



கீழ்வானம்
சிரிக்கிறது....
கதிரவனின்
கடல் கூடல் அழகு....

-



உறவுகள் பொய்யென்று
திகட்ட திகட்ட கவியெழுதி
முடிக்க...

ரசித்து ரசித்து குழம்பியொன்று
கலக்குறேன்
வாசலில் வந்துநின்ற உறவுக்கு....

-



மானுடம்
மகத்தான சாபக்கேடு..
மனிதத்தை
நாம் உணரும் போது
நம்மை மரணித்துப்போகச்
செய்துவிடும்...

-



ஈரமணலில் ஆழப்பதியும்
கால் சுவடுகள் விமர்சனங்கள்....
அவைகளுக்கு
பொழியும் மேகங்கள்
உள்ளமட்டுமே
உயிர்இருக்கும் ..

-


Fetching சீதாலட்சுமி வெங்கட் Quotes