உறக்கத்தைத்தேடி அலைகிறேன்... கனவிலாவது நான் விரும்பும் வாழ்வை வாழ...
-
நாம் சொல்லும் வார்த்தைகளில் கேட்பவரின் வாழ்க்கை இருக்கிறது... வில்அம்புகளை விட நாம் உதிர்க்கும் சொல் அம்புகளில் வேகமும், காயமும் அதிகம்...! ஆகையால் தீய சொற்களை தீப்பொறிகளாய் மனதிலேயே வெடித்திடுவோம்...!! நல்வார்த்தைகளால் எதிர்படும் மனிதர்களின் வாழ்வில் தீப ஓளி ஏற்றிடுவோம்..!!! அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🤝🙏🌹🪄🎉🎊💥🍫
-
கவனித்தும் கவனிக்காமல் செல்வது போல சென்று சட்டென்று திரும்பி புன்னகைத்த போதுதான் உணர்ந்தேன்....! அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம் என்பதை...!!
-
கேள்விகளால் சூழப்படும் உலகம் பதில்களின்றி பரிதவிக்கிறது...! அவரவர் மனங்களில் ஆயிரத்தெட்டு கேள்விகள்.. ஆனால் பதில்களை மட்டும் அடுத்தவரிடத்தில் தேடுகிறது...!!
-
முதலோ முடிவோ கனவோ நிஜமோ வரமோ சாபமோ எதுவென்றாலும் இக்கணமே சொல்லிவிடு...!! நானும்
மெழுகைப்போல் உனக்காக துளித்துளியாய் கரைவதா..? இல்லை..... தீப்பந்தம் போல் மொத்தமாய் நம்காதலை எரித்து விட்டுச்செல்வதா..? எல்லாம் உன் சொல்லில்தான் உள்ளது...!!!
-
பத்து முறை நினைவு படுத்தியும் அவள் வாங்கி வரச்சொன்னதை நானும் மறந்து போக... பார்வையாலேயே எனை எரித்த நேரத்தில் நான் நின்ற இடத்திலேயே பூமி உறைந்து போக.... அன்றிரவு முழுதும் எனது உறக்கம் பறிபோக... இப்படியாகவே நகர்கிறது ஓர் எளிய கணவனின் வாழ்க்கை....!!
-
பிள்ளையாராக மாறப்போகிறோம் என்று ஆவலாக சென்ற மண்...! பின்பொரு நாளில் பிணத்தின் முன்பு உடைப்பட்டு கிடந்தபோது உணர்ந்து கொண்டது...!! மண்ணோ... மனிதனோ..
படைப்பவனின் முடிவே இறுதி முடிவென்று...!!-
என்னுள் இருக்கும் உன்னைத்தவிர கொடுப்பதற்கு ஏதுமில்லை என்னிடம்...!!!
-
இப்போதெல்லாம் தடுமாறியோ, தடுக்கியோ இல்லை அடையாளம் தெரியாத வாகனம் மோதியோ எப்படி இருந்தாலும் பாதையோரம் விழுந்து கிடப்பவனை பார்த்ததும் அப்போதே காரணத்தை கண்டு பிடித்து விடுகிறார்கள் மக்கள் எனும் துப்பறிவாளர்கள்.... ""செம போதை"
-