காணும் திசையெல்லாம்
காட்சிப் பொருளாய் நீ
கேட்கும் ஒலியெல்லாம்
உன் குரலே...
சொல்லப்போனால் என்
பரம்பொருளாய் நீ!-
அழகாய் பூமியைப் படைத்தாய்,
அதில்தான் எத்தனை சுவையை வைத்தாய்?
அத்தனையும் சுவைக்கவும் வைத்தாய்,
சுவைத்த பின்னே புளிக்கவும் வைத்தாய்,
புளிக்கின்ற சுவையை கண்முன்னே காட்டி,
புளிக்காத பரம்பொருளே நீ ஏன் ஐயா பின்னால் நின்றாய்?
-சிவ ப்ரகாஷ்
-
உளமுற உனை தொட
உணர்ச்சிகள் விடுபெற
உடைகளும் விடைபெற
ஒன்றெனும் உருபெற
தரணியும் தயைசெய்யாதோ தடையின்றி
பரம்பொருளே!!
-
அலையாடும் நினைவுகளில் அவளும் தானாட இங்கே
உயிரும் உசலாடுதடி உன்
நினைவில் ஆட்டிவைத்தாயடி
நீயும் பரம்பொருளோ இல்லை
என் பிராணனின் பொருளோ-
படைப்பின் இலக்கணங்கள் படைத்தவன் அறிவானா..? குப்பைத்தொட்டி மனங்களை கோபுரத்தில் வைத்துவிட்டு, தேவதை மனங்களை தெருவினில் விட்டுவிட்டார். இந்தியச்சட்டம், பாழடைந்த மண்டபத்தில் ஒதுங்கி கிடப்பது போல் படைப்பவனின் சட்டங்களும் சிதிலமடைந்து கிடக்கிறது..! நல்லோர் எவராவது உண்டெனில், திருத்தி கொடுங்கள். படைப்புகளின் விதிமுறைகளை...!
-
அம்மாவின் விரல் பிடித்துத்,
திருதிருவென விழிக்கும்,
திருவிழாக்கூட்டத்துக் குழந்தை போல,
உம் விரல் பிடித்து நான்!
இறைவா!!!-
பாம்புகள் நெளியும் பாதையில் செல்கிறேன்!
பாலாக நினைத்தவனும் பாம்பாகிறான்! - வந்த
பாதையினை மறந்து கொக்கரிக்கிறான்!
தத்தித் தவழ்ந்து தாங்கிச் சுமக்கிறேன்!
கூடச்சுமக்க யாருமில்லை,
உத்தாசைக்கும் ஒருவரில்லை,
என்ன வாழ்க்கை என்று மயங்கிக்கிடக்கையில்தான் புரிந்தது என்னைச்சுமப்பதே அவர்தானென்று!!!
அண்டம் படைத்த ஆதிசிவனின்,
நிழலில் வாழும் பேறுபெற்றேன்!
அவர்துணையிருக்க வேறு எவர்துணைவேண்டுமெனக்கு!!!??-
என் ஐம்புலன்களால் அறிவது
சிலது..
அவையின்றி இன்னும் உணராதது
பலது..
ஆனாலும் எளிதில்
புலப்படுவது..
என் அப்பன் திரு அண்ணாமலையரின்
பெருங்கருனையே..!-
கலங்காதே பயத்தை விடு
உன் தேவையெல்லாம்
உனக்காக அந்த பரமாத்மா
ஏற்கனவே கொடுத்துவிட்டார்.-
வந்தது இரண்டு கனவுகள்..
இரண்டிலும் இரண்டு சொற்கள்..
பலித்தது ஒரு பாதி..
பலிக்காதது ஒரு மீதி..
மாயை வினா கேட்க
தூதாய் வந்த கனா விடை
சொல்ல..
உணர்வாய் கலந்தேன்..
பரம்பொருளோடே..
-மனோ
-