இருளுக்கு ஒளி அழகு..
இரவுக்கு நிலவழகு..
தாய்க்கு சேய் அழகு..
கவிக்கு எழுத்தழகு..
சிவத்திற்கு சக்தி அழகு..
என்னருகில் அவளிருக்க
இவ்வாழ்வே பேரழகு..!-
எழுத்தும் என் சுயத்தை
மனத்தால் பட்டறிவினால்
உணர்ச்சியினால்
உணர்வினால் எழ... read more
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
-
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
-
அவள் ஒரு
பெருங்கிழத்தி...
அவளிடம் பெரிதாக
பொருள் இல்லை..
ஆனால் பெரிதான செல்வத்தை
தன்னிடத்தே கொண்டவள்..
ஒளிவு மறைவில்லா
மனதுக்கு உரிமையவள்..
அவளை கண்டு பேசிய
மீச்சிறு நொடிகளிலேயே
தன்னியல்பிற்குரிய
அளவில் எமக்கு
மாவிருந்தளித்து
போய் வா
என்று வழியனுப்ப..
அந்திகையில் நான்
எனை மறந்து கடந்து
கிழத்தியோடு யாமாகினேன்..
- வழிப்போக்கனின் உறவுக்கதை.
-
முகமுடி கழற்றி
மௌனம் கலைத்து
மனம் திறந்த
உறவோடு உரையாடு...
ஏனெனில் பேரன்பு
வெட்ட வெளியாக
தான் உள்ளது..!
பூசிய பட்டைகளிலும்
அணிந்த ஆடைகளிலும்
தாழிடப்பட்ட மனங்களிலும்
அவை இல்லை..
ஏனெனில் பேரன்பு
வெட்ட வெளியாக
தான் உள்ளது..!
-மனோ-
ஒத்த மரத்தின் இருப்புக்கும்
துணை உண்டு..
துணையின்றி..தனித்திங்கு
எதுவுமில்லை..
- பேரன்பின் கொடையில் இருத்தல்
என்பது மெய்மை..-
எது உறவு?
உள்ளிருந்து
உணர்வோடு
உரையாடி
கலத்தல்
உறவு..!
உது
உண்மைக்கும்
உயிருக்கும்
நெருங்கியது..!
உறவில் முரண்கள் இருப்பினும் அன்பு உண்டு..
பாசம் இல்லை..
பாசாங்குமில்லை..
உறவுகளை
கண்டுகொள்வதும்
அமைத்துக்கொள்வதும்
உ(ள்)ன் வசம்...!
- மனோ
-
அகம் குவித்து
புறம் படும்..
புறம் பட்டு
மனம் விரிக்கும்..
மனம் விரிக்க
மெய்யதனிட்டு
ஆதி உணர்த்தும்..-
உன்னால் என்னை
அன்னை தன்னை...
அணங்கு மனத்தால்
புயங்கிய உணர்ச்சியது..
உணர்ச்சியின் கூத்தாய்
வெளிப்படும் உரிப்பொருளே..
கருப்பெறும் யாதும் உனதாமே...
-