நாம் நாமாக இருப்பதற்கு
எந்த மெனக்கிடலும் தேவைபடுவதில்லை,
அடுத்தவர்களால் கவனிக்கப்படுவதற்காகவே
அத்தனையும்...!
@i_am_sp
-
வாழ்க்கை ஆரம்பமாகின்றது"
உண்மைதான்
ஒரு நாளில் எதுவும் மாறப்போவதில்லை
ஆனாலும் முயற்சியுங்கள்,
.
.
ஒரு நாள் எல்லாம் மாறும்
@i_am_sp-
பழையவை கழிதலும்,
புதியவை புகுதலுமாய்
பலருக்கு போகி இருக்க,
கழித்த அந்த பழையதே
புதியதாய் சிலருக்கும்
இந்த போகி இருக்கத் தான் செய்கிறது.
@i_am_sp
-
அதிக நேரம் மெனக்கெட்டு
அழகாய் உடுத்திய
ஆடைகளுக்கு அர்த்தம் இருப்பதில்லை,
அவசர கதியில் கழற்றி எறியப்படும்
இராப்பொழுதுகளில்...!
@i_am_sp-
வசப்படும் தூரத்தில் தான்
வானம் உள்ளது..!
என்ன ஒன்று எனில்?
வசப்படும் என்ற நம்பிக்கை உள்ளவர்களுக்கே
அது புலப்படுகிறது.
@i_am_sp-
சாலையோர மரங்களுக்கு
நம்மிடம் இருந்து
பெரிதாய் என்ன தேவை இருந்து விட போகின்றது?
நீரோ... உரமோ... கூட அல்ல..!
கிளைகளை கூட வெட்டிக்கொண்டேனும்
மிச்சமிருக்கும் நிழலில் இளைப்பாறியேனும்
என்னை அப்படியே விட்டுவிடுங்கள் என...!
@i_am_sp-
விழ முடியா
உயரங்களும்,
எழ முடியா
பள்ளங்களும்,
வாழ்வில் இல்லை...!
@ i_am_sp-
நிலவின் நிழலில்
இறுதியாய்
குடித்தனம் நடத்துகின்றன,
நாளை குழம்பில்
கொதிக்கவிருக்கும்
விடைக்கோழிகள்...!
@ i_am_sp-
பாடை ஏறும்
வரை பார்த்திருந்து
ஏறிய பின்
முறைசெய்ய
அடித்து கொள்ளும்
மானங்கெட்ட உறவுக்கு பெயர்தான்
சில சுயநல சொந்தங்கள்!
@ i_am_sp-
சுற்றிலும்
மனிதரின் எலும்புக்கூடு
ஆள் ஆரவாரமில்லா
பூமியில்,
நெகிழிகள் மட்டும்
படபடத்து கொண்டிருந்தன!
@ i_am_sp-