இறுதி ஊர்வலங்கள் எடுத்துரைக்கின்றன,
சம்பாதிக்க வேண்டியது பணங்களை அல்ல,
நல்ல மனங்களை என்று!!!-
இரண்டுமாடி குடியிருப்பில்
இருப்பவர்க்கு முப்பதுநாள்
மொட்டைமாடி பார்வதி
அக்காவிற்கு இரண்டுவாரங்கள்
ஒழுகும் குடிசைக்குள்
கிழிசலோடு ஒண்டி வாழும்
முத்தம்மாவிற்கு
இரண்டே மணிநேரம்தான்...
நோவுகண்ட உடம்பில்
வறுமை ஒதுக்கும் நேரம்
அவ்வளவுதான் ஓய்வு...-
நான் உன் கிட்ட இருந்தா
நீ பணக்காரன்
உன்னை விட்டுப் பிரிந்தால்
நீ ஏழை
என்னை மற்றவர்கள் இடம் கொடுத்தால்
நீ வள்ளல்
அடுத்தவர்களிடம் என்னை பெற்றால்
நீ கடன்காரன்
என்னை இஷ்டத்திற்கு செலவு செய்தால்
நீ பொறுப்பற்றவன்
என்னை செலவு செய்யாமல் வைத்திருந்தால்
நீ கஞ்சன்
என் மேல் அதிக ஆசை வைத்தால்
நீ பேராசைக்காரன்
என் மேல் பற்று இல்லை என்றால்
நீ துறவி
இப்படிக்கு பணம்.....-
வழக்கமான அதே
பாதை தான் ...
வழிப்போக்கனாய்
கடந்தேன் மரங்களையும் , மனிதர்களையும் .
பால் மனம் மாறாத
அப்பச்சிளம் பிஞ்சு விரல்கள்
என்னை நோக்கி நீண்டன ...
படபடவென சட்டைப்பையில் கைவிட்டேன் ...
ஏமாற்றமே மிஞ்சியது. கைகளில் வெறுமை .
மனதில் கணம்.
ஏதும் உரைக்காமல்
நகர்ந்து சென்றான் முளைக்கும் முன்
கிள்ளப்பட்ட அந்த
சிறிய பூ ....
விடையை யாசித்தபடியே நடந்தேன் ...
அவனின் சிந்தனை
என்னவாய் இருக்கும் என்று .!?-
அடைமழையில் கரைந்த மண்ணாய்
அப்பாவின் வங்கிக் கணக்கு
அவள் திருமணத்திற்கு..!-
பணம் மட்டுமே எல்லாமென
எண்ணுபவனிடத்தில்
மனதின் உணர்வுகள் என்றும்
மௌனத்தையே மொழியாக்கும்-
எல்லோரிடமும் பணம் இருந்தால்,
குணத்திற்கு மதிப்பில்லை...
எல்லோரிடமும் குணம் இருந்தால்,
பணத்திற்கு மதிப்பில்லை...
Money everywhere,
makes us poor...
Goodness everywhere
makes us rich...-