திருமணத்தில் முடியும் காதல் வாழ்ந்து காட்ட கிடைக்கும் வாய்ப்பு!
வெற்றிகரமான தொடக்கம்!!
வாழ்த்துகள்!-
இறுதி ஊர்வலங்கள் எடுத்துரைக்கின்றன,
சம்பாதிக்க வேண்டியது பணங்களை அல்ல,
நல்ல மனங்களை என்று!!!-
வார்த்தைகளை தேடினால் வலிகளே கிடைக்கிறது!
தொடங்கினாலும் முடித்தாலும் உன் முகம் மறைக்கிறது!
எதையோ தீட்ட எத்தனித்தேன்
இம்முறையும் உனை தீண்டியே முடித்திறுந்தேன்!-
தினமொரு நிலையென மனம் மாறும்!
மறவாத மனமொன்று எனை தேடும்!!
தேவையென்ற ஆறுதல் உனை சேறும்!
தினந்தோறும் என் விடியல் உனை தேடும்!!-
அன்னை என்பது
ஓர் கதாபாத்திரம் அல்ல
அது ஓர் உருவம் அல்ல
அது ஒரு உணர்வு
குழந்தை பெறாதவரிடமும் இருக்கும்
அனைத்து வயதினரிடமும் இருக்கும்
ஆண் பெண் வேறுபாடின்றி இருக்கும்
தாயுள்ளம் நிறைந்த அனைவருக்கும்
அன்னையர் தின வாழ்த்துகள் !
-
நடக்க பழகுமுன்னே
பறக்க துடித்தவளே!
நாவசைக்க, நீர் சுரக்க
அதில் நீந்த நினைத்தவளே!
அழ வைத்த அத்தனையும்
அடையாளம் கண்டவளே!
ஒப்பனையின் செலவொழித்து
மை போதும் என்றவளே!
வலியுடன் வந்தவருக்கு
சிரிக்க சொல்லி தந்தவளே!
பிரிந்து செல்லும் சிலரிடம்
பிரிவின் வலி கண்டாயா?
சிரிக்க தொடங்கு இன்பத்தில்,
அதுதான் பலம் சேர்க்கும் துன்பத்தில்!
யாதொரு உயிர்க்கும் தீங்கிழைக்கும்
நிலை வேண்டாம்!
புறம் கூறும் மனமிருந்தால்
வாழ பாதை இருக்காது!
பெற்ற உதவிகள் நினைவிருந்தால்
உன்னிடம் மனிதம் தோற்காது!
பொய் சொல்லி பழகாதே,
அது இருளின் புகலிடம் நெருங்காதே!
ஒழுக்கம் ஒன்றே உனை உயர்த்தும்
அது ஒரு வழி பாதை
உயர்ந்த இடத்தில் நிலை நிறுத்தும்!
வந்து போக பிறக்கவில்லை
வாழ்வதும் வீழ்வதும் வேறு கைகளில் இல்லை!
வரலாறு என்றும் நிலையானது
உன் வரலாற்றை நீ எழுது அதுவே சிறப்பானது!-
நிம்மதி தேடி அலையும் பலருக்கு தன் இருப்பிடத்தையே இன்பமயமாக மாற்றும் மழலைகளிடம் மட்டுமே பதிலுள்ளது.
-