உலகின் மறுமுனையிலிருந்து
ஒரு இறகு காற்றில் மிதந்து
மெல்ல தோளில் அமர்ந்து
மீண்டும் மென்காற்றால்
அழைத்து செல்லப்படுவது போல தான்
அவனும் விடைபெற்றுக்கொண்டான்!
-
மிகவும் கவனமாக ஆழ்மனதின் பாதாளத்தில் காற்றும் புகுந்திடாத பெட்டிக்குள் பூட்டி வைக்கிறேன் என் மர்மங்களை...
எனினும் மெல்ல கசிந்துவிடுகிறது கவிதைகளில்.!-
School முடிந்து வீடு திரும்பும் வழியில்
Ragdoll பூனை இருக்கும், கொன்றை மர நிழலில்,
குளிர் காயும் பச்சை நிற balcony கொண்ட வீட்டில் தான் நீ இன்னமும் வசிப்பதாய் நம்பிக்கொண்டிருக்கிறேன்.!
-
"இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்க எனக்காக "
என்று கேட்பவருக்கு என்னால் இயன்றதெல்லாம் ஒரு மேகம் வரைந்து தருகிறேன்...
நாலு பேரின் முன்னிலையில் நீங்கள் கண் கலங்கும் நிலை ஏற்படும்போது, உங்கள் தலை மீது மட்டும் மழை பொழிந்து உங்கள் தன்மானத்தை அது காக்கும்.!
-
ஆதியில் நானும் நிலவும் மட்டும் தான் இருந்தோம், பாதியில் வந்து சேர்ந்தது தான் இந்த கவிதைகளும், காதலும் !!
-
இன்றளவும் அவள்,
ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்கத் தயங்குகிறாள்.
நால்வரின் எட்டு கண்களும் தன்னையே பார்ப்பது போல் குறுகி நெளிகிறாள்.
வெறிச்சோடியிருக்கும் சாலைகளை தனியாக கடக்க பயந்து துணைத்தேடி நிற்கிறாள்.
போதுமான வெளிச்சம் இல்லாத அந்த பேருந்து நிலையத்தை பார்க்கும் போதெல்லாம் குலை நடுங்குகிறாள்.
பிள்ளைகள் பெற்றுவிட்டாள், பெருவாழ்வை கழித்துவிட்டாள்,
இன்னமும் உடலெல்லாம் வியர்த்து, கதறி எழுந்து, ஒரு கெட்ட கனவை கடக்கிறாள் நாளொன்றிற்கு இரண்டென !
-
வெகு நாட்கள் ஆகிவிட்டன அப்பாவை பார்த்து...!
தூரத்தில் யாரோ அப்பாவின் சாயலில் தென்படுகிறார்,
கொஞ்சம் பாதுகாப்பாக உணர்கிறேன் .!-
— % &இரு வேறு கடிதங்கள் வேண்டுமா
கண்ணம்மா !?
என் வரிகளுக்கு இடையில்
நான் விரும்பும் கரு மையினால் பதில்
எழுதி அனுப்பு,
என் கடிதம் என்றும்
நம் கடிதமாய்
என்னோடு வாழட்டும் .!
— % &-
நீ,
மிடுக்கென்று...
சொல்லின் இடையில்
காதை திருகி, கடிப்பதே
"வன்முறையின் அழகியல்".!!
-