கைமாற்றுக்கு கண் சொட்டுந்நீரும்
கஞ்சப் புன்னகையும்!
அவ்வன்பிற்குத் தர வேறேதும்
என்பால் இல்லையடி தோழி.-
◾ENTP😎
◾Graphic designer🎨
◾Dreamer👼
◾Unofficial trial and error cook.🍛
◾Reg... read more
பல திங்கள் பறந்தனவே!
ஓர் இரவில் ஒரு சில வரிகள்
ஓட்டமிட்ட கண்கள்
மிளிர்ந்தன வெட்கப்புன்னகை.
அல்ல ,
அது விபரீதப் புன்னகை!
தெரிவை தொலையவில்லை!-
சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாண்டி
பிறர் நலன் கருத்தில் கொண்டு
ஆசைகளற்று போவதினால்
மணமானவளும்
துறவியாகிறாள்!-
என்றோ ஒரு நாள் செய்த இரயில் பயணம்
அன்று சந்தித்த கவிதாவின் பெண் குழந்தைக்கு
போலியோவினால் கால் பாதித்த கதை
இன்றும் நான் செய்யும் பயணத்தின் போதொல்லாம்
நினைவிலே இருக்கிறது. சரி ஆகியிருக்கனும்
என்ற வேண்டுதலோடு!
அரைநாள் இரயில் பயணத்தில்
பிடித்து போன கவிதா அத்தைக்கு
இன்றுவரை நான் வேண்டுவது
என்னுள் இருக்கும் நினைவுகளின்
ஆழத்தை காட்டுகிறது.
மனித மனம் எதையும் மறப்பதில்லை,
மறைக்கிறது!-
செடிகளில் சில,
நீரும் பராமரிப்பும் இன்றி
வாழத்தெரிந்தவை!
சில உறவுகளும்
நினைவுகளும்
அச்செடி வகைகளை
ஒத்தவை!-
அப்பாவின் நண்பரின் மகளுக்கு
என்னவன் வீட்டில் வைத்து
காது குத்தும் திருவிழா!
இதனால் தான்
எனக்கு கனவுகளின் மீது
அலாதி பிரியம்!-
தாய் பசுவை
கண் முன்னே நிற்க வைத்து
கன்றின் காலை கட்டிபோடுதல்
என்ன நியாயம்?-
காரை வீட்டுத் திண்ணையில்
ஓரம் இருந்த ஓட்டையில்
ஒற்றைச் செடி வளர்ந்திருக்கும்!
அதற்கு உன் ஒருவனை தான் தெரிந்திருக்கும்.
பத்து பேர் பேசிப் போனாலும்
பக்கத்தில் நீ அமர்ந்தால்
ஒற்றை நீர் தேவையில்லை
உன் நிழலில் வளர்வேன் :)-
நாலு பவுனு நக வேண்டா,
வெள்ள கல்லு வெச்ச
ஸ்டிக்கர் பொட்டு போது!-