படித்ததனால் தனக்கு
நிறைய தெரியுமென
தலைக்கனத்தோடு பேசும்
பல முட்டாள்களை
கடந்து தான் செல்கிறேன்.
-
நல்ல வேளை
நான் அழகா பொறக்கல!
இல்லன்னா நானும்
உலக அழகியா
வலம் வந்துருப்பேன்
உன் கவிதைகளில் மட்டும்!
எனக்கும் கொஞ்சம்
மண்டைகர்வம்
ஏறியிருக்கும்
🤔😁😜
Thank God-
பணமும்
பதவியும்
இருக்குதுன்னு
ஆட்டம்
போட்டவங்க
நிறைய பேரு
மண்ணுக்குள்ள!
நியாயமா
நடந்துக்க!-
வெற்றி பல கண்டு அதன்
சுவை உண்ட நாம்..
தலை சுமையென வெற்றி தனை
சிரம் ஏற்றப் பார்க்கின்
முறையே.. மூர்ச்சையுற தோற்கிறோம்!
உலக சல்லாபமதில் தமை
இயல்பாய்.. அமர்த்திட தளர்கிறோம்..
அதில் தனிலே தனிகிறோம்...-
தவறுகளைச் சுட்டிக்காட்டுவதால்
எனக்குக் கிட்டும்
தலைக்கனம் எனும் பட்டம் பிடிக்கிறது
தவறை தவறே இல்லை எனுமாறு
நகைத்து ஏமாற்றி எதிர்தரப்பிற்கு
ஏமாளி எனும் பட்டம் வழங்குவதை விரும்பாததால்...
_மொ.ப.பார்த்தீபன்...
-
நம் தன்மானத்தைத் தலைக்கனம்
என்ற எண்ணத்தோடு பார்க்கும் எவரிடமும்
நம்மைப் புரிய வைக்க முயல்வது
தரிசில் விதைத்த விதையைப் போல
எந்தப் பயனையும் தராது!!-
தலையில்
அதிக கனம்
கொள்வதால்
தீக்குச்சியும்
பேனாவும்
முதலில்
பதம் பார்க்கப்படுகின்றது
நம் கைகளில் !!!!!
அதிக அழுத்தத்துடன் !!!!!!!!
-
தலைக்கனம் கொண்டேன் ..
நானே தரணிக்கு வெளிச்சம் என்று..
இறுதியில் எரிந்து நின்றேன்,
இருள் படர்ந்த கருங்குச்சியாய்..
இப்படிக்கு
தீக்குச்சி.-
ஒட்டுமொத்த
இருளையும்
ஒரு கணம்
தின்று செரிக்கும்
ஒற்றைத்
தீக்குச்சிக்கு
தலைக்கனம்
இருப்பதில்
தவறேதுமில்லை...!!!-