பல இன்பத்தில் பகல் பொழுது கழிந்தாலும் ...
இரவில் சூழும் வெறுமை என்றுமே நிரந்தரம்...
மறக்க நினைக்கும் அனைத்தும் வந்து நிற்கும் "நினைவுகள் " என்ற பெயரில்..-
மறக்க முடியாத காயங்களும்..
மறைக்க முடியாத சோகங்களும்..
மனிதனுக்கு,
கம்பிகள் இல்லா சிறை தானே.
-
என் கோபத்தை ,பிறருக்கு நாக்கு உரைக்கும் முன்னரே ..
முந்திக் கொள்கிறது" கண்ணீர்"...
'உன் சோகத்திலும் உடன்யிருப்பது நான்தானே ' என்ற அக்கறையில்...-
மாதவிடாய்
பிறருக்கு அது வேறு உதிரம் வரும் தீட்டு..
அவளுக்கோ உயிரே போகும் தீராத வலி. ஓய்விற்கான நேரத்தைக் கூட பறித்துக் கொள்ளும் சில காலம் மாறா நடைமுறைகள்..
துள்ளித் திரிந்தவளைக் கூட தூண்டில் மீன் ஆக்கும் சில நாட்கள்...
ஹார்மோன் செய்யும் கால விளையாட்டு ..
அவளையும் கோவக்காரியாக மாற்றும்..
அடி வயிற்றில் ஆணி அடித்து ..கால்களை கணமாக்கி ...இடுப்பில் ஈட்டி பாய்ச்சி ..உடம்பை பிணமாக்கும் ... இயலாத இம்சையான நாட்கள்..
"ஏன் பெண்ணாய் பிறந்தோம் " என்று தோன்றும் நேரத்தில் அரவணைக்க பாசம் இருந்தாலே போதும்...
அந்நேரத்தில் பெண்ணின் மனநிலை மாற்றத்தை புரிந்துக் கொள்ளும் ஆண்களும் ,உறவுகளும் இருந்தாலே போதும்..
அந்த வலியும் ஒரு வரம் தானே...
-
ஆண் தேவதை
மகனாகி ,ஒருத்தவளுக்கு மணாளன் ஆகி ,மழலைக்கு தந்தையாகி ,தோல் சுருங்கி மடியும் காலத்திலும் கடமைகள் முடிவதில்லை அவனுக்கு...
ஆண்கள் சுதந்திரமானவர்கள் என்று பேசும் உலகிற்கு தெரிவதில்லை ....
அவன் மனதில் உள்ள காயங்கள்..
ஆழுக்கத் தெரியா கோழைகள் இல்லை..
நாம் அழுதால் குடும்பம் ஆடிவிடும் என்று வாழும் தியாக தீபங்கள்...
மகனாய், கணவனாய் ,தந்தையாய் ,"நீ என்ன செய்தாய் ?"என்று கேட்கும் உறவுகளுக்குப் புரிவதில்லை ...
அவன் வாழ்ந்த வாழ்க்கையே குடும்பத்திற்காக தான் என்று ...
பழைய பல தரவை உடுத்தினாலும் "இது புது சட்டை தானு " சொல்லி
பொண்டாட்டி ,பிள்ளைக்கு வாங்கி கொடுத்து அழகு பார்க்கும் பொக்கிஷங்கள்...
பத்து மாசம் சுமந்தவள் தாய் என்று போற்றும் உலகிற்கு ...அவளையும் சேர்த்து சுமந்தவர் அப்பா என்று புரிவதில்லை ....
-
வைரஸ் தொற்று..
தொற்றிக் கொண்டது எல்லா உயிர்களிடம் ...
தோற்றுவிடக் கூடாது என்பதற்காக போராடுகிறது மருத்துவ சமுதாயம்..
ஏது நம் கடமை ..?
தொற்று பரவாமல் , தூரம் கடைபிடித்து , சுத்தம் பேணி ,விட்டில் இருந்தே விரட்டி ஒழிப்போம் கொரோனாவை ...
விழித்திரு மனிதா...!
இனியும் உயிர் பலி வேண்டாம் ...
இன் வாழ்விற்காக விழித்திரு விழிப்புணர்வோடு....
-
மகளுக்கு திருமணமாம்..
தாயின் தாலியோ அடகுக்குக் கடையில்....
"வறுமை"-
பேதை,பெதும்பை, மங்கை,மடந்தை,
அரிவை,தெரிவை,பேரிளம் என
எத்தனை பருவம் பெண்ணுக்கு..
ஆனால் ..அன்றே கள்ளிப்பால்
இன்றே காமத்துப்பால்..
பிஞ்சு உடலைக் கூட விடுவதில்லை
இந்த நஞ்சு மனிதர்கள்..
உடையில் மாற்றம் தேவையாம்..
இந்த மானமில்லா சமுதாயத்திற்கு.
மனதில் மாற்றம் வேண்டும் மானிடா..
மகளிர் தின வாழ்த்து தேவையில்லை
சுதந்திரமாக வாழ விட்டாலே போதும்.....
-
மகளதிகாரம்
மகள் என்ற மந்திரத்திற்கு..அத்தனை அப்பாக்களும் அடிமை தான்.
அவ ஆசைப்பட்டதை அடைய அடம்பிடிக்கத் தேவையில்லை ..அவ அப்பாவை பிடித்தாலே போதும்..
செல்லமா வளத்த புள்ள அடுத்த வீட்டுக்கு போகுறப்ப ஏனோ மனசு பதச்சுத்தான் நிக்கும்...
பேரன் பேத்தி இருந்தாலும் பெத்த புள்ள குழந்தை தான்..
மகளுக்கு ஒன்னுநாளும் முதலும் துடிக்கிறது அப்பா தானே..
பெத்தவ அடிச்சாலும் "எம் மக தங்கமுனு கர்வமாத்தான் சொல்லுவாங்க"..
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ..
ஒருவரியில் விளக்க முடியா உறவு
"அப்பா"
-
தலைக்கனம் கொண்டேன் ..
நானே தரணிக்கு வெளிச்சம் என்று..
இறுதியில் எரிந்து நின்றேன்,
இருள் படர்ந்த கருங்குச்சியாய்..
இப்படிக்கு
தீக்குச்சி.-