தீபச் சுடர் கண்ட விட்டில் பிரம்மிக்க
தீயிட்டுக் கொள்ளுமாம்..
கபட பெண் கண்ட இளைஞனாய்..!-
I like me more than me🎂😊
My world is so fantasies😊
Art lover👍
T... read more
இல்லை எனும் போது
ஆம் எனும் சொல்லின் ஏக்கமே வருத்தம்
மெய்வருடலின் இடையில்
வழிகின்ற வியர்வை சந்தோச வருத்தம்
நிச்சயிக்க பட்ட பெண்
ஒடிவிட்ட நிலையில் மாப்பிள்ளை வருத்தம்
ஓடிய பெண்ணை ஏற்ற
கணவன் வாழ்வோ...🤭🤭
புரிந்தால் வாழ்க்கை எளிது
புரியாவிடின் உங்கள் போன்றோர்
மனது கிடைப்பது அரிது-
சுயமரியாதை
நேற்று நடந்த சம்பவம்., இந்திய தென்முனையில் நிலம் முடிய மீதம் ஒரு கூப்பிடு தூரம் இருக்கும் முன்னம் ஓர் தேநீர் விடுதி அங்கே நரை எய்தி ஓர் ஊழியன் சுறுசுறுப்பாக...! இட்ட பணியை செவ்வனே செய்கையில்... ஓர் குரல் என் பின்னால்.. "யேவே இங்க வாவே எச்சி எழை எடுக்க மாட்டீரோ" என்றார்.. அவனுள் சுளீர் என கோவம்.. அவனின் பதில் எனை பிரமிக்க செய்தது.. "வாங்க போங்கன்னு சொல்லமாட்டீங்களோ அது என்ன வாவே போவே ன்ணு வே போட்டு கூப்படதீரும்.." அட அவனின் சுயமரியாதை அங்கே ஓங்கி ஒலிக்க படுகிறது..! இல்லை இல்லை அவரின் சுயமரியாதை..! எடுப்பது எச்சில் இலை ஆயினும் அது பணியே அன்றி இழிவென சொல்லும் அளவிற்கு பிச்சை அல்ல..!-
ஓர் பெண்ணிற்கு வாக்குறுதிகள்
தரும் முன் இருதரப்பிலும்
குடும்பம் இருப்பதை கருத்தில்
கொள்ளுங்கள்...!
இல்லை எனின்
அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சும்..!
மன்னித்து விடு ஆருயிரே..!-
அவள் வார்த்தைக்கு நான்
எதிர் வார்த்தை சொன்னதில்லை
அவள் எனை வேண்டாம் என்றாள்
நானும் சம்மதம் தந்தேன்..!-
உன்னோடு பேசாமல் இருப்பது
நேரம் பொருட்டு அன்று
உன் மேல் கொண்ட
அன்பை பொருட்டு..!-
அவளும் அழுகிறாள்
நானும் அழுகிறேன்
ஆறுதல் சொல்ல
இருவருக்கும் மனமில்லை
மீண்டும் வரமாட்டனா
என்று அவளும்
மீண்டும் வந்தால் அவள்
அழுகை தீராதென அவனும்-
வலியாய் வலிக்கிறது கண்கள் கரைகிறேன் என் மனைவியாய்
நேற்றுவரை நினைத்திருந்தேன்
இன்று மரணவலி தருகிறாள்
அவளை திருமணம் செய்ய
ஆசையிருந்தும் அது அவளுக்கு
நன்மை தாராதாயின் மறந்துவிடு
மனமே...! அவளாவது நன்மை
கானட்டும்-
ஓர் அடவியில் ஓர் தாசியின்
மெத்தை மடியில் ஆதாம்
தோட்டத்து ஆப்பிள் ரசித்தேன்..!
கையடக்க அட்டையில் அர்த்த
சாமம் தாங்கிக்கொள்ள போதுமான
ஒற்றை ஆணுறை..!
இயற்கை எழில் ததும்பிய
இரவு வேளையில் பௌர்ணமியும்
காமம் மோதி மேகமெத்தையில்
போதை ஊறி உலவ
பேராண்மை காட்டி விரகதாபம்
தீர்த்தேன் அமிர்த கங்கை
அவ்வழி சேர்ந்தது அணுறை
திடமிழந்து கிழிய...! தாசியின்
கனத்த கருத்த இரண்டாம் இதழில்
திரவம் வழிய பேதையென
பார்த்து மகிழ்ந்தேன்...!
விளைவாய் விலைமகளின் கொள்முதலில்
பால்வினை நோய்க்கு ஆளானேன்..!
இது என்னை இரட்டை ஆயுள்
தண்டனை அனுபவிக்க செய்து
இன்று மரணப்படுக்கையில் எழுத
செய்வித்தது..!-
அவனாம் அவளாம் எல்லாம் அவனால்
எவனோ எவளோ தொடங்கி முடிவது
என்னால் உன்னால்..!
இதனால் இதுநாள் நேர்வது இதுவோ
எனின் எனதோ உனதோ உள்ளதும்
செறிவுற உளதே..!-