யார் அவர்கள்..?
எங்கிருந்து வந்தார்கள்..?
ஏன் இன்னும் இந்த,
பழைய நியதிகளை..
தூக்கிச் செல்கிறார்கள்..?
அவர்களும் மாறாமல்..
மாற்றம் பெற விரும்பும்
மனிதர்களையும்...
ஏன் அவர்களைப் போல,
மிருகங்களாக மாற்ற முற்படுகிறார்கள்..?
அவர்களின் பார்வையில்..
சமத்துவம் என்பதின் அர்த்தம் தான் என்ன..?
அவர்களின் வாழ்வில்..
அவர்கள் அடையப் போவது தான் என்ன..?
பிறப்பால் மட்டுமே வேறுபட்டு நிற்கும்..
ஆண்களிடத்தும் பெண்களிடத்தும்..
உயர்வு தாழ்வினை ஏன் புகுத்துகிறார்கள்..?
போதும்...போதும்...
இவர்கள் நம் பாதையில்..
உலவியது போதும்..
தூக்கி எறிந்து விடுங்கள்...
காலம் அவர்களை அகற்றிவிடும்..!-
உயர்ந்தோர்
தாழ்ந்தோர் என்ற
தீண்டாமை குழந்தையை
கருக்கலைப்பு செய்தாலே
அனைவரும் சமமென்ற
சமத்துவ குழந்தை பிறந்திடும் ...-
பாரதியின் கவிதைகளில்..!
உயிர்த்தெழட்டும் இவ்வையகம்..!
பாரதியின் சிந்தைதனில்..!
தழைத்தோங்கட்டும் இங்கே சமத்துவம்..!-
இந்த சமூகத்தை
மாற்றியமைக்க விரும்புகிறேன்!
பெண்ணிற்கும் ஆணிற்கும்
சம உரிமைகள்!
பெண்ணிற்கும் ஆணிற்கும்
சம அங்கீகாரம்!
பெண்ணிற்கும் ஆணிற்கும்
சம முதன்மைத்துவம்!
பெண்ணிற்கும் ஆணிற்கும்
சம அளவு சுதந்திரம்!
சமத்துவம் நிலவ வேண்டும்
இப் பார்தனில்!
சங்கடங்கள் ஓய வேண்டும்
காயம் கண்ட..
இந்த காரிகையரின் மனம்தனில்!-
சமத்துவம் வந்ததென்று
சத்தமாய் கூறுகின்றனர்
பெண்ணை பெண்ணாக
பார்க்காமல் மனிதராய்
பார்ப்பது எக்காலம் . . .?!
எங்கோ படித்த நினைவு-
கொடுக்கும்
அன்பிலும்...
பெற்றுக்கொள்ளும்
அன்பிலும்...
சமத்துவம்
இருந்தாலே...
வாழ்க்கை
சிறக்கும்...💕-
நேற்று இரத்தம் கொடுத்த
வாலிபருக்கு,
நீ எந்த சாதியென கேட்காமல்
நன்றி சொல்லிவிட்டார்
சாதித் தலைவர் !-
சில பேரைக் கண்டால்
இயற்கையாகவே ஒரு இளக்காரம்;
சில பேரைக் கண்டால்
இயற்கையாகவே ஒரு மரியாதை!
சரியாக இருந்தாலும்
ஏசலும் கேலியும் சிலருக்கு;
தவறாக இருந்தாலும்
பாராட்டு சிலருக்கு!
இப்படி நமக்குள்ளேயே
பல பாகுபாட்டுக் குறைகளை வைத்துக்கொண்டு
எப்படி எதிர்பார்க்க முடியும்?
எல்லாவற்றிலும் சமத்துவம்...?-
சமத்துவ விருட்சத்தின்
விழுதாய் தேசமெங்கும்
சாதிக்கட்சிகள்-