கதிரனின் காதலி
பூமியென்பதால்
கொஞ்சல் கொஞ்சம்
அதிகமாக இருக்கிறது...
மற்ற உயிர்கள் பற்றி
அவ்விருவருக்கும் கவலை இல்லை...
நீங்களும் கவலைப்படாதீர்கள் !-
கவி ப்ரியன்
காதல் மோக மில்லாதவன்
நட்புள்ளம் கொண்டவன்
குழந்தைகளை கண்டாலே பற்றி ... read more
தனிந்து கிடந்த
இதயம் மீண்டும்
தீப்பிடித்தெரிகிறது...
தெரியாமல் தேங்கிக் கிடந்த
மழைநீரில் அவள் முகம்
தெரிந்துவிட்டது....
தயவு செய்து
நல் பாதை அமைத்து
வையுங்கள்...-
பரிட்சயமான முகம்தான்,
ஆனாலும்
புதிதாய் தெரிந்தாள்,
பிரகாசமாய் எரிந்தாள்...
இன்று பவுடர் தீர்ந்துவிட்டது போல..... !-
மரங்களெல்லாம்
எங்கள் ஊர் மேகங்களை
அசைந்தாடி அனுப்பி வைக்கிறது....!
பாவம் விரக்தியாய் நகர்கிறது
நகர்ந்து கொண்டே இருக்கிறது....-
அரசியல்வாதி
ஐந்து பக்க வசனம் பேசுகிறார்
சொல்லப்பட்ட எல்லாம்
விரைவில் செய்துதரப்படுமென்று......
ஐந்து ஆண்டு முடிந்தது தெரியாமல்!!!!!-
யாரோடும் ஒப்பிட
நிலவு ஒன்னும்
அவ்வளவு அழகில்ல
வெறும் வட்டமா
மஞ்சள் வெள்ளையா
மாசு படிந்த
பூமிக்கு பக்கத்து கிரகமா,
மொத்த வானத்துல இரவு
அண்ணாந்து பாத்தா
மொதல்ல தெரியுது அவ்லோதான் !-
நேற்று இரத்தம் கொடுத்த
வாலிபருக்கு,
நீ எந்த சாதியென கேட்காமல்
நன்றி சொல்லிவிட்டார்
சாதித் தலைவர் !-