கேட்கப்படாத கேள்விக்கு
ஓடி ஓடி பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம்
யாரோ நமது கழுத்தை நெரிப்பதாய்
பகல்கனவு தானோ கண்டுகொண்டிருக்கிறோம்?
இங்கே கேள்வியும் கேட்கப்படவில்லை
யாருக்கும் பதிலும் தேவைப்படவில்லை
வாழ்வதற்குத்தான் வாழ்க்கை என்பது
இங்கே நமக்குத்தான் புரியவில்லை!-
இயற்கையிலே இதயம் தொலைப்பவள்...
தமிழுக்குள் தன்னைக் காண்பவள்...
இலக்கியத்தால் உயிரோ... read more
ஆயிரம் அம்புகள் வந்து தைக்கும் போது
எப்படி நம்புவேன் உயிர் தங்குமென்று?
ஒவ்வொரு விளக்கும் ஊதி அணைக்கப்படும் போது
எப்படி நம்புவேன் விடியல் வருமென்று?
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
சாட்டையடியாய் சிதைக்கப்படும் போது
'முடியும்' என்பதும் 'நம்பிக்கை' என்பதும்
காதில் கேட்பதேது?
முயற்சி செய்ய சோம்பேறித்தனம் என்ற கட்டத்தை
நான் முன்ஜென்மத்திலேயே தாண்டிவிட்டேன்
இப்போதெல்லாம்
முயற்சி செய்யவே பயமாக இருக்கிறது!-
வானமெங்கும் நீலம்
நடுநடுவே வெண்பஞ்சு மேகம்
கீழிருந்து பார்க்கையிலே
கிளைவிரித்துக் குடைபிடிக்கும் பசுமை பொங்கும் மரம்
வசந்தகாலத்தின் தொடக்கம்
இதயத்திலே இனியதொரு நடுக்கம்
நீலவானம் வெண்மேகம்
கீழிருந்து பார்க்கையிலே
சாளரமாய் பச்சை மரம்
ஆஹா இதையெல்லாம்
அழகிய கவிதையாக்க முடியுமா?
சிறியதொரு கவிதையிலே
இந்த அழகெல்லாம் அடங்குமா
பகிரங்கமாய்ச் சரணடைந்தேன்
இயற்கையன்னை மடியிலே
பேசாமல் வாயடைத்து நிற்க மட்டும் சம்மதித்தேன்
-
Believe in
You can do that!
To avoid later regret
'You could have done that'
-Pavipragu-
காதல்- காதலைக் கொடுங்கள்
கைநிறையக் கொடுங்கள்
மனம்நிறையக் கொடுங்கள்
உங்களுக்குக் கொடுங்கள்
உங்கள் இதயத்திற்குக் கொடுங்கள்
உங்கள் அன்பை உங்களைவிடவும் தேவைப்படுவோர் இங்கே யாரும் இல்லை!-
எங்களுக்கென்று எதுவுமில்லை!
அந்த பரந்த வானத்தையும்
விரிந்த நன்றியுணர்வையும் தவிர!-
கடலைத்தாண்டி வாழலாம்!
காதல்மொழிகள் பேசலாம்!
கரை சேர ஓடிவருவோர் மத்தியிலே
நாம் மட்டும் அன்பெனும் கூட்டுக்குள்ளிருந்து
ஆயிரம் முறை மூழ்கலாம்!-
மனதை எங்கேனும்
மறைத்து வைத்திட
மரத்தின் அடியை நாடுகிறேன்...
சிதைந்த உள்ளம் சீரடைந்திட
வான்வெளிபார்த்துப் பாடுகிறேன்....!
என்ன இருந்தாலும் அதை பத்திரமாய் காக்க
இயற்கை இருக்கும் !
எதுவும் இல்லையென்றால் தன்னிடமிருக்கும்
எதையும் கொடுக்கும் !
நீ போதும் எனக்கு !-
பறவையினங்கள் எங்கும் கானமிட
இலைகள் சலசலத்துத் தாளமிட
மாடியும் சொர்க்கமாய் மாறிவிட
மேகக் கண்காட்சியைப் பார்த்துவிட
இன்னொரு தாய்மடியை உணர்ந்தேன்
இயல்பாக உனக்குள்ளே தொலைந்தேன்-
கொஞ்சம் மூச்சுவிடு மனிதா!
இணையத்தின் பிணைக்கைதியா நீ?
வலைபின்னிவிட்டதோ உன்னை வலைபின்னல்?
சேவை செய்யும் அடிமைகளுக்கு நீ சாமரம் வீசலாமா?
உனது கண்டுபிடிப்பு உன்னையே ஆட்டிப்படைக்கலாமா?
கண்களையும் கைகளையும் நீ கெஞ்ச விடலாமா?
மாயமென்னும் உலகுக்கு நீ
இரையாகலாமா?
பயன்படுத்து....
பண்பட்டுப் பயன்படுத்து...
பயனிருந்தால் பயன்படுத்து...
கொஞ்சம் மூச்சுவிட்டுப் பயன்படுத்து....!-