ஏழு ஸ்வரங்களில்
எத்தனை ராகமென்று
நிச்சயமாக தெரியாது
ஆனால்
நீங்கள் பாடிய பாடல்கள்
அனைத்திலும்
என்றும் வாழ்ந்திருக்கும்
ஏழு ஸ்வரங்கள்-
#நெல்ஜெயராமன்
🙏🙏🙏🙏🙏
ஐயா
அறுவடை செய்தான்
காலன் உம்மை...
நீங்கள் உங்களையே
விதைத்துச் சென்றுள்ளீர்கள்
நடவு செய்வோம் நாங்கள்
உங்கள் கனவுகளை...
-
கண்ணீர் அஞ்சலி
ஆசியாவின் மிகப்பெரிய
கோடீஸ்வரர்களில் ஒருவர்.
டாட்டா குழுமத்தின் தலைவர்.
சொத்து மதிப்பு 3800 கோடிகள்.
காசுவைத்திருப்பவர்களெல்லாம்
கோடீஸ்வரர்கள் இல்லை.
மக்களின் மனதில் இருப்பவர்களே
உண்மையான கோடீஸ்வரர். ஆண்டு
வருமானத்தில் 65%நன்கொடையாகவே
அளிப்பவர்.
திருமணம் செய்துகொள்ளளாதவர்.
தனது 84வது
பிறந்தநாளை வெறும் 10ரூ கப் கேக்கை
வெட்டி கொண்டாடிய எளிமையானவர்.
அன்னாரது ஆன்மா
சாந்தியடைய வேண்டுவோம்.
-இராதாஇராகவன்.-
அலட்சிய போக்கு
பற்றிய அதன்
விளைவை
சுஜித் மற்றும்
அவரது தகப்பானர்
அவர்களை பார்க்கும்
போதுதான் தெரியும்.-
சுமையாய்.... சுகமாய்....❤️
உன் நினைவுகள் ❤️❤️
சொர்க்கமாய் என்னுள் ❤️-
எனை கடித்தமைக்காக
கடிந்துகொண்டு..
மரணபயத்தினை தான்
காட்டிட
நினைத்தேனே தவிர..
மரணத்தை அல்ல..
மன்னித்து விடு
சிறு எறும்பே...-
நான் மதிக்கும்...
மிக சிறந்த கவிஞர்,
கல்வியாளர்...
கல்லூரி முதல்வர்!
இடதுசாரியென்றாலும்,
இடம் வலம் காணும்...
நற் சிந்தனையாளர்!
தோழர்...
அம்மா வசந்தி தேவி
அவர்களின் மறைவுக்கு,
கண்ணீர் அஞ்சலி.!
நீங்கள்...
விதைத்து சென்றது
முளைக்கட்டும் விருட்சமாய்.!
-இராதாஇராகவன்.
-
மாமா மீண்டு
வருவீர்கள் என்றே நம்பினேன்
ஆனால் நீங்கள் மீளாமல் என்னை
கண்ணீர் கடலில் தள்ளிவிட்டீர்கள்.
-