தவறுகளை
அடுக்கிக்கொண்டே
செல்பவன் நல்லவன்
அதே பிறரின் நலனுக்காக
உண்மையை மறைத்து
பேசுபவன் கெட்டவன்-
கேள்வி ஒன்று
ஆனால், விளக்கம் நான்கு
விஷியம் ஒன்று
ஆனால், பார்வை நான்கு
தீர விசாரித்து
உண்மையை அணுகு !!-
சில தகவல்கள்
உண்மை போல்
சித்தரிக்கப்படுகிறதா
ஒருவர் பார்வையில்..?!
உண்மை மறைக்கப்பட்டு
மறுக்கப்பட்டு வருகிறதா..?!
இன்றைய கால சூழலில்
உண்மை பொருளை ஆராய்தல் விட
"நமக்கெதற்கு வீண் வம்பு" என
நகர்ந்து செல்வதே நம்
வாழ்க்கை நகர்த்திச் செல்ல
ஏற்புடையதாய் உள்ளது...
-
வற்புறுத்தி வாங்க
கூடாதது இரண்டு...
ஒன்று மரியாதை
மற்றொன்று அன்பு...
அதில் உண்மை
இருக்காது...!!!-
உரைக்கச் சொன்னால்
பொய்யும் அரங்கேறி விடுகிறது
அடங்கிச் சொன்னால்
உண்மையும் அடங்கி விடுகிறது
அரங்கேற வைப்பதும்
அடக்கி அடங்க வைப்பதும்
பணத்தின் போதையால்
தானும் மனிதன் என்பதை
மறந்த பல வணிக அரக்கர்கள்
-
உண்மை மேல் இருக்கும் பயத்தினாலே ,
பொய் பேசத் தொடங்குகிறார்கள் /-
வாழ்க்கையும் சில
நேரங்களில்
பொய்யாக தான்
இருக்கிறது..
நாம் நம்பியவர்கள்
பொய்யாக
இருக்கும் போது..!!-
உண்மை சில நேரங்களில்
தோற்று போகலாம்..
ஆனால் பொய்யாக போய்விடாது..
மண்ணிற்குள் மறைத்து வைத்த
விதை போலத்தான் உண்மையும்..
தண்ணீர் ஊற்றவில்லை
என்றாலும் மழை வரும் போது
தானகவே முளைத்து விடும்..
அதற்கு சக்தி அதிகம்
உண்மையை போல..!!-
பொய்கள் அழகாய்
வர்ணிக்கப்படுகின்றது
ஏனோ உண்மைகள்
தான் உளறப்படுகின்றன !!
-
உண்மையை
தேடி வெகுதூரம்
பயணித்தேன்..
உண்மையாக
நானில்லாத போது..!!-