ஒரு நீண்ட நெடிய
பாதையின் வளைவை போல
மெல்லிடையின் வளைவோ
கருமேக கயல்விழி
வெள்ளை சீலையில்
வீதி உலா போலும்
இம்மானுடன் உம்மனதிலே
மங்களமிட்டு மாலை சூடவே
இவ்வேளையில் உன்மணாலன்
காத்துகிடக்கிறேன்..
-
சீடன் கேட்டனாம் : அந்த மலர் எவ்வளவு குடுத்துவைத்தது, இறைவனின் பாதத்தில் உள்ளது ; அந்த மலராக இருந்துவிடாவோ..
குரு சொன்னாராம் : அந்த மலர், பறித்தபோதே இறந்துவிட்டது, அதன் ரத்தவாடையோடு தான் அவன் பாதங்களில் உள்ளது, பளியீடுவதற்கு
மலரை வைத்தால் என்ன,மாட்டை வைத்தால் என்ன,
முடிந்தால் இறைவனின்
பாதங்களாய் இருந்துவிட்டுப்போ...
-
வாகனங்களின் சக்கர
மிருதுவுக்காக
தெருயேங்கும் தார்
சாலை போடப்பட்டு விட்டது
ஆனால் செருப்பு யில்லாமல்
நடப்பவன் பாதம் மட்டும்
சுட்டுக்கொண்டேயிருக்கிறது..!!-
இத்தனை பணம் இருந்தும்
நான் அதை வெறுகின்றேன்
ஏன்னெனில் இங்கு கடனாளிகள் அதிகம்,
இத்தனை உணவு இருந்தும்
நான் அதை வெறுகின்றேன்
ஏன்னெனில் இங்கு பட்னியாளிகள் அதிகம்,
இத்தனை வீடு இருந்தும்
நான் அதை வெறுகின்றேன்
ஏனெனில் இங்கு வீடற்றோர் அதிகம்,
இத்தனை பிரபஞ்சம் இருந்தும்
நான் அதை வெறுகின்றேன்
ஏனெனில் இங்கு மனிதர்கள் அதிகம்..!!
- யாழன்
-
என் இதயம் பூட்டப்பட்டுயிருந்தது
அவள் வந்தாள் சாவி தந்தாள்
திறக்கப்பட்டது உள்ள சென்று
சுற்றிபார்த்தாள் சற்று ரசித்தாள்
சில நாட்கள் வசித்தாள்
மழை வந்தது
கூரை வீடு ஒழுகியது
போதும் என்றாயிற்று
பிடிக்கவில்லை என்றாள்
சென்று விட்டாள்
என் இதயம் பூட்டப்பட்டது.. ❤️
-
நீங்கள் வேண்டுவதை மட்டும் தருவதில்லை பிராத்தனை
..
நீங்கள் வேண்டாததையும், கேட்காததையும், உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாததையும்,
நினைக்காததையும், செய்யவிரும்பாததையும்,
தருவதே பிராத்தனை..!!
-
இத்தனை பூஜைகளும் அபிஷேஷங்களும் ஆடைகளும் அணிகலன்களும் படையல்களும்
ஏற்றியும், அந்த கல் உங்களின் வேண்டுதலை
நிறைவேற்றாது, இருப்பினும்,
வல்ல கருணைமிக்க இறைவன்,
அந்த கல்லின் வழியாவது
உங்களின் வேண்டுதலை
நிறைவேற்றப்படுவதாக
என்பதே பிராத்தனை...
-
சொல்லி விட்ட காதல்
சேர்ந்து விட்ட காமம்
சென்று விட்ட இளமை
இறுகப் பட்ட இதயம்
திரும்ப பெற இயலாது.....
-
உங்களின் துன்பங்களை
துன்பங்களிடமே முறையிடுங்கள்
ஏனெனில்
சந்தோஷங்கள் அதை
ஏற்பதில்லை..!!
-
இதோ கடுச்சிட்றத்தோடும், பெருங்கணத்தோடும்,
பொழிகின்ற மழையை
உங்களால் புடித்து வைத்துக்கொள்ள முடியாது
அது காற்றாட்டு வெள்ளமாய் ஓடும்,
இருப்பினும்; இருப்பினும்
எரிகளிலும், குளங்களிலும், தொட்டிகளிலும்,
வழிந்து வழியும் வாழிகளிலும்
பிடித்து வைத்துக்கொள்ளகிறோம்
அல்லவோ, ஆகத்தான்,
உங்கள் வாழ்வில் நடக்கும் துன்பங்களை
உங்களால் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது, மாறாக
அவ்வப்பொழுது நடக்கும் சந்தோஷங்களே அதை நிரப்பி கொள்ளகிறது..!!-