எப்போதும் நான் அவசரமாய்
ஓடுகின்ற சாலையில்,
நீ வந்த பின்பு பூச்செடிகளை
பார்த்து ரசிக்கிறேன்.
34° வெயிலில் கூட
உன்னோடு நடந்தால்
நெஞ்சம் காஷ்மீராய் மாறாதா?
உன் இருதய வாசலில்
காத்து நிற்கிறேன்
ரெட் சிக்னல் காட்டாதே!-
at the age of 14.
மலை உச்சி தொட்டுவிடும் அவசரத்தில்,
என் வீட்டு இலை நுனியில் நின்ற
மழைத்துளியை
ரசிக்க மறந்துவிட்டேன்.-
கொஞ்ச நேரம்
தொட்டுப் பேசாமல் இருந்தால்
பாலாடை போர்த்தி
தூங்கி விடுகிறது
ஒரு குவளை பால்.
-
மலர் மீது அமரும் தேனியாய்
ஆழ் கடல் தொடும் நங்கூரமாய்
அவ்வப்போது,
நினைவுத் தடங்களை
பிறரிடம் விட்டுச் செல்கிறேன்.
வாழ்க்கை எதிரிலமர்ந்து என்னுடன்
சீசா விளையாடுகிறது.
அதை சமப்படுத்தும் வேலையிலே
என் காலம் முடிந்து விடுகிறது.-
என் இடத்தை வேறு யாரோ
உனக்காக நிரப்பிக் கொண்டிருக்க,
நினைவுகள் மட்டும் சுமந்தபடி
வேடிக்கை பார்த்து கடந்து செல்கிறேன்.-
லாரிக்கும் பேருந்திற்கும்
இடைப்பட்ட இடத்தில்,
அதிவேக பைக்கர்
எமனுக்கு மிஸ்டு கால்
விடுக்கிறார்...-
பேருந்துக் கூட்டத்தின் நடுவே,
கைக்குழந்தையோடு
ஒரு பெண் நுழைகிறாள்.
இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தது;
அடுத்தவரின் மீதான மனிதம் தான்
காணவில்லை.-