QUOTES ON #ஆந்தை

#ஆந்தை quotes

Trending | Latest
22 JAN 2020 AT 18:00

என்
கவிகளை
பார்த்து நீ
கடுப்பாகும்
வேளை..
அர்த்த
ஜாமத்தில்
அலறும்
ஆந்தையின்
சாயல்!

-



அம்முச் செல்லம் பட்டுக்குட்டி
அழுது கொண்டு நிற்பதேனோ
அம்மாவுனக்கு கதை சொல்லவா
அன்பாய் உனக்கு அமுதூட்டவா

விடுகதை ஒன்றைக் கேளுங்கள்
விடையை நானும் கூறிடுவேன்
விடையை சரியாகச் சொன்னால்
விளையாட அனுமதி தாருங்கள்

பறவையை பற்றிக் கூறுகிறேன்
பட்டென பதிலை சொல்லிவிடு
பஞ்சபட்சி பறவையில் ஒன்றிது
பகலில் வெளியே வருவதில்லை

இரவில் உணவைத் தேடிடுமே
இருட்டிலும் பார்வை கூர்மையே
இருக்கும் இடத்தில் இருந்தபடி
இரையின் ஒலியை அறிந்திடும்

வட்டமான தட்டை முகமதற்கு
வளைந்த சின்ன அலகிதற்கு
முட்டை கண்களால் மிரட்டிடும்
முழுகோணம் கழுத்தைச் சுற்றும்👇

-


4 JUL 2020 AT 20:08

இருள் நிறைந்த இரவில்

காய்ந்து சருகான

மரமும் அதன் பின்

நிலவும்., மரக்கிளையில்

ஆந்தையும் பார்க்க

நன்றாகத்தான் இருக்கிறது...

-


23 OCT 2018 AT 21:32

ஆந்தைகளின் அலறல்களிலும்

வாகனங்களின் ஒலிகளிலும்

இரவு கடக்கிறது.

-


10 NOV 2019 AT 20:39

கொட்ட கொட்ட விழி பிதுங்கி
காத்திருக்கின்றேன். என்
காதலுக்கு மரியாதை கொடுப்பாள்
என்று இரவெல்லாம்...

-


2 DEC 2020 AT 14:52

ஆந்தை என அலட்சியமாக
அபிப்பிராயம் கொண்டவர்களுக்கு
ஆந்தை எனக் கல்லூரியில்
அடியேன் பட்டப் பெயர்கொண்டவன்
ஆதலால் விளக்குகிறேன்
ஆம் அதிசயக்கத்தக்க தகவல்கள்
அநேகமாக 133 வகை
ஆந்தை வகைகள் உண்டு
அண்டார்டிகாவைத் தவிர
அனைத்து கண்டத்திலும் உள்ளவை
அவை மனிதனைப் போன்று
அதிசயமாக முகத்தில் முன்புறமாக
அகன்ற கண் பெற்ற பறவையினம்
அநேகமாக 270° தலையை
அழகாக திருப்பக்கூடியவை
அகன்ற கண்கள் ஆதலால்
அவை இரவில் காணும் திறன் கொண்டவை
அதன் எடையைவிட
அதிக எடையுள்ளதையும்
அசால்டாக வேட்டையாடக் கூடியவை
அதற்கு பகலில் கண் தெரியாவிட்டாலும்
அதீத காது கேட்கும் திறமையால்
அதி பலவீனமான சத்தத்தை வைத்தே இரையை
அதிக துள்ளியமாக தூக்கக் கூடியவை
அதிக மென்மையான இறகுகள்
ஆதலால் ஓசையின்றி பறந்து வேட்டையாடுபவை
அவை எலி, அணில், முயல்களின் எமன்
ஆதலால் விவசாயிகளின் தோழன்
........ முழுமையாக கீழே காணலாம் 👇👇👇

-



இந்த இரவின் தனிமையில்
அந்த ஆந்தையின் கண்களில்
படாமலே இருந்திருக்கலாம்

-


1 FEB 2020 AT 15:49

ஆந்தையும் தூங்குகின்றது !!

-


27 MAY 2019 AT 23:40

இரவில் ஏனோ
ஆந்தையாகி
போனேன்?
இருள் தரும்
வலிகளை ரசிக்க
தொடங்கிவிட்டேனோ??

-


20 JUL 2020 AT 21:48

இரவில்
வேட்டையாடுகிறது
ஆந்தை,
என் இரவையே
வேட்டையாடுகிறாள்
அந்தக் கோதை.

-பித்தன் ✍️

-