கொண்டாடப்படாத வெற்றியென்பது
பிறந்ததுமே கொல்லப்படும்
நூறு குழந்தைகளுக்குச் சமம்!-
சிமோனா மகாவிஷ்ணு
(சிமோனா மகாவிஷ்ணு)
176 Followers · 16 Following
Poet | Writer | Freelancer | Script Writer
அப்பாவின் ஓவியம்
அம்மாவின் காவியம்
மகளின் யாவும் read more
அப்பாவின் ஓவியம்
அம்மாவின் காவியம்
மகளின் யாவும் read more
Joined 27 August 2017
28 APR 2022 AT 9:40
22 APR 2022 AT 10:39
அன்னார்ந்து பார்க்கிறேன்
நட்சத்திரம் இருந்த இடத்திலிருந்து
ஒரு துளி விழுகிறது-
7 FEB 2022 AT 10:25
இலையின் மேல் நீர்த்துளி
துளியினுள் சிறு ஒளி
இருள் பின்னால்தான் தெரிகிறது-
16 MAY 2021 AT 8:13
உனக்கு முக்கியத்துவம்
அளிக்கப்படாத இடத்திலிருந்து
ஒதுங்கியே இரு!
கூட இருந்து
கஷ்டப்படுத்துவதை விட
தள்ளி இருந்து
கஷ்டப்படுவது மேல்!
-
31 MAY 2020 AT 20:01
கடலை சுமந்துசெல்லும்
இந்த மேகத்திடம்
நதிக்கான துளிகள் இல்லை!
-சிமோ.ம
-
5 MAY 2020 AT 23:26
உருகியோடும் வலி
கோடைக்காலத்து எருக்கம் பூவில்
ஒளிந்து கொண்டிருக்கிறது...
வெடித்துச் சிதறும்போது
பறந்து பிடித்து
ஊதிவிடுவோம் வா!
-சிமோ.ம-
4 FEB 2019 AT 21:34
நீ மறைக்கும் புன்னகையில் தான்
என் மரணத்தின் நாட்கள்
விதைக்கப்படுகிறது..!-