மஞ்சள் பூசிய வட்டமுகம்!
கை நிறைய கண்ணாடி வளையல்!
எலுமிச்சைப்பழ அளவில் குங்கமப்பொட்டு!
அகிலத்தையே வசம் இழுக்கும் இருவிழிகள்!
தெய்வீக தோற்றம்!
அந்த சக்தியே திருநங்கை உருவத்தில்,
என் எதிரில் அமர்த்திருந்தந்து போல் ஒரு உணர்வு.
மெய்சிலிர்த்து போனேன்!
ரசித்துக்கொண்டே கழிந்தது,
என் இன்றைய ரயில் பயணம்!!-
சிவப்பு நிற சீலையிலே சீரி சிங்காரித்து.....
கார்மேகம் சிதறிய கார்கூந்தல் தலை விரித்து சிரிக்கிறாயே......
கண் எதிரே வந்து கவலை தீராத போறாயே .....
தீராத உன் விளையாட்டில் சீண்டி தான் போறாயே .........
வடக்கு வாசல் சிம்மாசனத்தில் அமர்ந்து தீராதா வரம் ஒன்று தாராய் தாயே..................-
சூரியன் உதித்தது காலை பிறந்தது வெள்ளி விடிந்தது எல்லோருக்கும் அம்மன் அருளாசியுடன் சிறந்த நாளாக அமையட்டும் இனிய காலை வணக்கம்..!!
-
சக்தி தரும் அம்மன் கோவில் யானை
அருள் கிடைக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறது
கோவில் வாசலில்..!!-
அம்பிகையே அருட்சுடரே
நின் விரல் தீண்டிய
அமிலமும் அமுதே!
அகிலத்தின் அரணே! என்
அகக்கசடை அறிந்து
அறுத்திடும் அரும்பொருளே!
உனை போற்றிப் பாட
உள்ளம் களிப்பில் காந்தமாகியதே!
-
திருவிழா வந்தால்தான் திசைமாறித் திரிந்த பறவைகள் எல்லாம்
கூட்டைத் தேடி குதூகலத்துடன்...!!!-
நாம் கண்ட கனவெல்லாம்
நிறைவேறினால்
கருவறையில் கற்பூறமும்
அம்மனுக்கு ஆடும்
கையில் பிரசாதமும்
மசூதியில் மண்டியிடுதலும்
தேவாலயங்களில் வேதமும்
ஒதப்பட்டிருக்காது
இந்நிலையில் கடவுளும்
நயவஞ்சகன் தான் போல்
பதிலுக்கு பதில் என்ற விடயத்தில்
-
காலத்தின் காத்திருப்பு கானல் நீரே
உனக்கான காத்திருப்பு உமிழ் நீரே
உலகம் நிறைந்த நீராய்
என்னுள் நிறைந்தவள் நீயடி
சூரியனில் தீபம் ஏற்றும் நீ என்
மேகத்தில் மறைந்த நிலவடி!
அன்னாய்! அருள் வழி நின்
மலரொளிச் சுடர் அகிலம்
அளிப்பாயே!-