சலனத்தோடும்
சலனமின்றியும்,
நீ சிலரை
கடந்து போகிறாய்!
சிலர் உன்னை
கடந்து போகிறார்கள்!
காதலும், தனிமையும்
எல்லோரையும்
கடந்து போகிறது!
கடந்து போதலும்
அழகு தானே கால்
நனைத்துச் செல்லும்
அலை போல!
-
தோற்று மீண்டும் எழ ஆசை!
read more
காற்றாய் வருடும்
உன் குரலின்
ஆசுவாசத்தில்,
ஊற்றாய் சுரக்குது
என் இன்பத்தின்
உயிர்மூச்சு!-
நெருக்கம் தராத
நெருடல்
மனதினுள்ளே!
உறக்கம் தராத
உணர்வு
இரவினுள்ளே!
மயக்கம் தராத
போதை
காதலினுள்ளே!
விளக்கம் தராத
விடை
வினாவினுள்ளே!
-
நடுநிசியில்
நரக நிழல்
உறக்கம் கவ்வும் போது,
சிரம் கோதும்
உன் மடியில்
அன்னிச்சையாக
உறங்கிப் போகிறேன்....-
ஓராயிரம் பௌர்ணமிகளை
கடந்த வந்த பெரும்பேறு,
உன்னோடிருந்த
ஓராண்டு காலத்தில்
உணர்ந்தது என் உயிர்க்கூடு!-
உன்னோடிருந்த உணர்வுகள்
உள்ளூர ஊறும் போது,
நினைவெல்லாம் நீயும்
கனவெல்லாம் உன் செயலும்
மனதை அடிக்கிறது பேய் மழையாய்!
பயம் தாங்காமல்
நடுங்கும் சமயம்,
நீர்த்துப்போன சாம்பலில்
புதைந்திருக்கும் கங்கு போல்,
நம் காதல்
வெப்பம் கடத்தி வெறுமையை
புறம் தள்ளாதோ?-
பனித்துளியில் முகம் பார்க்கும்
சூரியன்
காற்றாய் எங்கும் வியாபித்த
காதல்
சிவதாண்டவத்தில் மிளிரும்
ஜோதி
ஆழி சூழ்ந்த அகிலத்தின்
வண்ணம்
உயர்ந்த மலைகளின்
மௌனம்
அடுப்பங்கரையில் தாளிக்கும்
வாசம்
கைகளுக்குள் உறங்கும்
செல்லப்பிராணி
வானத்தில் வட்டமிடும் பறவையின்
சுதந்திரம்
பாட்டும் நாட்டியமும் நிறைந்த
பணிவு
புத்தகத்தில் ஒளிந்துள்ள
கருணை,
இவையனைத்தும் சொல்லித்தரும் பாடம்,
மனிதம் மாறாத
கவிதையாய் வாழும் கலையை!-
சுழியம் ஆகிப்போன
இரவெல்லாம்
உன் மந்திர
புன்னகையால்
தலைகோதி
நித்திரை அளிக்கிறாய்
அல்லி மலரே!-