நிழலும் நானும் கை கோர்த்து நடக்கும்போது...
நினைவுகள் நீந்திக் கொண்டே வந்தன!
நீச்சல் தெரியாமல்
ஆற்றில் குதித்ததுபோல்...!!!-
NSK
250 Followers · 209 Following
நா.செந்தில் குமார், பிப்: 27,
அறத்தின் கண் அகிலமெல்லாம்....!
உணர்வுடன் வாழ்...!
தமிழ் மொழி ப... read more
அறத்தின் கண் அகிலமெல்லாம்....!
உணர்வுடன் வாழ்...!
தமிழ் மொழி ப... read more
Joined 11 October 2021
5 HOURS AGO
6 HOURS AGO
அடி என்னவளே!
விழிகளுக்கு மையிட்டு
அடம்பிடிக்காதே!
நீ அடம்பிடிப்பதெல்லாம்
வடம்பிடித்து இழுத்து
வந்துவிடுகிறது
எந்தன் மனது...!!!-
6 HOURS AGO
தயவுசெய்து
இமைகளை கொஞ்சம் மூடடி!
என் உதடுகள்
உளறிக் கொட்டுவதை
நிறுத்த மறுக்கிறது...!!!-
6 HOURS AGO
குளோரோபார்ம்க்குள் குதித்தாலும்
மயக்கம் வராத எனக்கு
உன் கண்களை காண்பதற்குள்
பார்வை இழந்தேன்
மயக்கவாசல் சென்று...!!!-
7 HOURS AGO
ஒளியின் நீளம் கூட
அளக்கிறேன்!
ஒரேயடியாக
பேசாம இருக்காதே!
வலியின் ஆழம் தேட
நினைக்கிறேன்!
மௌனத்தில்
என்னை வதைக்காதே...!!!
NSK
-
10 HOURS AGO
பார்வையில் தேடும்போது
விழிகள் மட்டும்
பேசிக்கொள்கிறது!
இதழ்கள் மௌனித்தே கிடக்கின்றன!
ஆராய்ந்து பார்த்தால்
உதடுகளுக்கு உரையாடபிடிக்காதாம்!
விழிகளால்
நனைந்தபிறகு...!!!-