பிள்ளைகளுக்கு
எல்லா கடமைகளையும்
முடித்துவிட்டு
நிதானமாய் நாம்மிருவரும்
விரல் பிடித்து பழங்கதை பேசி
பிடித்ததை செய்து பொழுதை கழிக்கலாம் என்றிருந்தேன்
இப்படி எனக்கு முன் சேர்வாய்
என்று தெரிந்திருந்தால்
உனக்கு முன்பு நான்
மாண்டு இருப்பேனே
எப்போதும் உன் கைப்பிடித்து
பழகிய எனக்கு பயமாய் இருக்கிறது
யாருமின்றி அனாதரவாய் இருக்கிறேன்
-
ஆயிரம் உறவுகளுக்கிடையில்
இருந்தாலும்...
உனதன்பிற்கென்று நான்
ஏங்கும் வேளையில்
நான் அனாதை தான்...!-
என்
சின்னச் சின்ன
ஆசைகளும்
எதிர்பார்ப்புகளும் கூட
அர்த்தமற்றது
எனப் புரிந்த
கணத்தில்
நான் "அனாதை"
என்றானேன் !!-
என்னைத் தேட வைக்கும் நீயே...
உன்னை தொலைத்து விட்டு எனை
அனாதை ஆக்கினாய்...-
மனதளவில் ஒருவரை
அனாதையாகவும்
தனிமையாகவும்
உணர வைத்து
விட்டோமானால்
கூட இருக்கும்
எந்த உறவுக்கும்
மதிப்பும் மரியாதையும்
இனிமேலும் இருக்க
போவதில்லை-
இருக்கும் போது எதுவும் பெரிதாக சொல்லி தர வில்லை ...
இறந்த பிறகு முழு வாழ்க்கையையும் சொல்லிக்கொடுத்து விட்டார் .,
"அப்பா" !-
அன்றிருந்த உன்னை, இன்று என் கண்ணீரில் உணருகிறேன்...
எந்தளவு நேசித்து இருக்கிறாய்
என்று..! இன்றோ நெருப்பில்
சிக்கிய புழுவாக நான்
துடித்துக்கொண்டு இரு(ற)க்கிறேன்....-
அன்பு செலுத்த
ஒருவருமில்லை
என்கிற போதுதான்
வாழ்வில்,
உண்மையான
அனாதையாக
உணர்கிறோம்..!-
மூக்கொழுகி
துடைப்பதற்கு
நேரமின்றி வீதியில்
நடை போடும் பச்சிளம்
அறிந்திருக்காது உண்மை
காதலின் காதலர்கள்
தான் இந்த நிலைக்கு
காரணமென்று !
-