QUOTES ON #வெற்றி

#வெற்றி quotes

Trending | Latest
28 JUL 2018 AT 12:18

வெற்றி

தொட்டுவிடும் தூரத்தில் நீ
இல்லை என்றாலும் எட்டிப் பிடிக்கவே
முயல்கிறேன் எட்டாக் கனி என்று உரைத்தவருக்கு நீ கிட்டும் கனி என்று உணர்த்தவே...

-


20 JUL 2021 AT 20:02

என் பலவீனத்தோடு மோதி
கொண்டாடி கொள்வது தான்
அவர்கள் வெற்றியென்றால்...
என்னால் இயன்ற பலத்தோடு
போராடி தோற்றது என்
தோல்வியாகவே இருக்கட்டும்...!

-


9 JUN 2021 AT 8:38

வெற்றி ஒரு
போதை...

ஒரு முறை அதை
அடைந்தால்
போதுவதில்லை...

மீண்டும் மீண்டும்
தன்னை அடைய
தூண்டும் ஆகச்
சிறந்த போதையது...!

-


5 JUL 2021 AT 20:00

வீழ்ந்தது
நிழலானால்
நிமிர்ந்தது
நாமென்றே
இருக்கட்டும் ‌..

-


28 JAN 2019 AT 16:00

தடைகளைத் தாண்டு
தடுப்பவற்றை உடைத்தெறி
தடம் மாறாதே

தடுப்பவன் எவனுமில்லை
தடுத்திட எவனுக்கும் துணிவுமில்லை

முன்னேறு முழுமூச்சாய்
முயற்சி ஒன்றையே கை கொண்டு

வெற்றி நிச்சயம்
விடிந்திடும் நாள் தூரமில்லை

-


14 MAR 2021 AT 7:09

நெஞ்சே எழு..!!

-


25 MAY 2020 AT 20:20

உன்னால் ஒருவன்
தன் வாழ்வில்
தோற்றுப் போகாமல்
இருப்பானே ஆனால்..
அதுவே உன்
வாழ்வின் வெற்றி!

-



என்னால் வெற்றி பெற்றான் என
பொறாமை பட மாட்டேன்
மாறாக அவனின் திறமையால் வெற்றி பெற்றான் என பெருமிதம் கொள்வேன்

-


5 MAR 2019 AT 8:35

வெற்றி பெற்ற பின்னும்
ஆட்டம் தொடர்கிறது
அடுத்த வெற்றியை நோக்கி...

-


16 APR 2021 AT 7:47

தோல்விகள் பல கடந்து
அடைந்த வெற்றி
சோதனைகள் பல கடந்து
பெற்ற செல்வம்
எதிர்ப்புக்கள் பல தாண்டி
சேர்ந்த காதல்
பழிச்சொற்கள் பல கேட்டு
அடைந்த பிள்ளைப் பேறு..
வலிகள் பல தாண்டி
பெறும் இன்பங்களுக்கு
ஈடாக ஏதுமில்லை
இவ்வுலகினிலே!

-