வீட்டுக்கு வந்து தங்குறவங்கள
அவங்க தகுதிக்கு ஏத்த மாதிரி
அதாவது அவங்க சாப்பாட்டு முறைப்படி
கவனிக்கனும்னு (கொஞ்சமா தண்ணீர் சேர்த்த பால்ல காஃபி, காசு கூடுன அரிசி, நல்லெண்ணெய்...)
நினைக்கிறவங்க பலர்.
அதெப்படி நம்ம வீட்ல தங்கினா நாம எப்படி சாப்பிடுறோமோ அதேமாதிரி தான் அவங்களும் சாப்பிடனும் னு
நினைக்கிறவங்க பலர்..
(இதுல எங்க மாமியாரும் கணவரும் இருவேறு ரகம். அதனால என்தல அடிக்கடி உருளும் அது வேறு விசயம்)
நீங்க எப்படி?-
ஒரு வீட்டிற்கு சென்றிருந்தோம். Sweetசாப்பிடுங்கள் அது இது என கொடுக்க தேநீர் மட்டும் போதும் என்றோம்.
அதை குடித்து முடிப்பதற்குள்...
ஏன் இன்னிக்கு டீ இவ்வளவு மோசமா இருக்கு.
பால் தண்ணியா.. சரியா கொதிக்க வைக்கலயா.. தூள் கலரே வரலஎன்று அந்த வீட்டு ஆண்
விமர்சிக்க அந்த பெண்மணியின் முகம் வாடி விட்டது..
இல்லங்க.. எனக்கு டீயோ காப்பியோ சூடா இருந்தா போதும்.. சொல்லப்போனா நான் போடற டீயை விட இது நல்லாதாங்க இருக்கு
என்றேன்.
ஆணின் முகம் செத்து போக
பெண்மணியின் முகத்தில்
திருப்தி தெரிந்தது..
அதென்ன அடுத்தவர் முன்
மட்டம் தட்டும் குணம்?
ஒரு டீயில் என்னவாகிடப் போகிறது?-
தமிழரின் விருந்தோம்பல்-
பந்தியில் பரிமாறுகையில்
கையசைவைப் பார்த்து
பரிமாறுதல்.
முகம் பார்த்தால்
உபசரிப்பில்-
வேண்டப்பட்டவர்,
பழக்கப்பட்டவர்,
தெரியாதவர்,
தேவையில்லாதவர்
என்ற பாகுபாடு
வந்து விடும் என்பதால்
-
"ஒப்புடன் முகம் மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி...
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமிர்தம் ஆகும்
முப்பழமொடு பால் அன்னம்
முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியி னோடு
கடும்பசி ஆகும் தானே"
விவேகசிந்தாமணி-
விருந்தோம்பல் பயன் கூறத்தக்கவை அன்று
விருந்தினரின் தன்மை பொறுத்து-
அன்பு நிறைந்த நிலையில் ஆர்வமுடன் விருந்தோம்பல் பண்பு மலரும் /
-
அன்று
அறுசுவை உணவுகளை
ஆவிபறக்கும் சாதத்துடன் வாழையிலையில் இடுவது விருந்தோம்பல்!
இன்று
நெருங்கிய உறவென்றாலும் நெகிழியிலையில்தான்
விருந்தோம்பல்!-
விருந்தோம்பல் தமிழனின் பண்பாடு ,
இதை மதிப்பதே மனிதனின் வெளிப்பாடு /-
விருந்தோம்பல் புரியாதோர், தான் சேமித்த பொருட்களை ஒரு நாள் இழக்க நெறிடும்போது, நமக்கென்று யாரும் இல்லையே என்று கூறிட நேரும்!
-
விருந்தினருக்கு முதலில் உணவு அளித்துவிட்டு, மிச்சம் இருக்கும் உணவை உண்ணுபவர் நிலத்தில் விதை விதைக்க வேண்டி வருமா என்ன!
-