QUOTES ON #ராவணன்

#ராவணன் quotes

Trending | Latest
5 JAN 2020 AT 22:27

துஞ்சிடா இமைகள்
துயில மறுத்து
துன்பப்படுத்துகிறது..
துவண்ட மனமோ
துளங்குகிறது
துகிலுரிக்க வேண்டிய
துச்சாதனனை எண்ணி..!!

-


16 MAR 2019 AT 21:08

தீ குளித்தாள் ‌சீதை...
இராவணன் கற்பு
நிரூபிக்கப்பட்டது...

-


16 MAR 2019 AT 20:56

இராமனுக்கே தவமிருந்தாள்!
இராவணன் வந்து முன்நிற்கிறான்!
சீதையை சிறையெடுக்க!

-


27 JAN 2019 AT 18:55

அண்ணன் இல்லாத பெண்கள்

காந்தாரிக்கான சகுனி மேலும்

சூர்ப்பனகைக்கான ராவணன் மேலும்

கொண்ட ஏக்கப் பார்வையை யாரறிவார்....


-


10 JAN 2022 AT 10:27

இமயம் தாண்டிய
இலக்கினை நிர்ணய
இலச்சினை கொண்டான்
இலங்கேஸ்வரன் இராவணன்
இயம்பியே ராவணக் காவியமாய்
இணக்கமான புலவனாய் குழந்தை
இளைய சகோதரன் இராமநாதனின்
இனிய அகவை திரு-நாளே இன்றும்

-


10 NOV 2019 AT 17:30

இராமனுக்கே காத்திருந்தேன்!
இராவணன் தனி ஒருவனாக
சிறை பிடித்து கவர நினைத்தான்!
நான் என்கிற அகந்தையை கொண்டு!
அன்பால் எனை கவர்ந்தவர் இராமன்!
நம்பிக்கையில் காத்திருக்கிறேன்!
வீரனாக வந்து எனை மீட்பார் இராமன்!

-



நெருப்பையும் சந்தேகிக்கும் ராமாயணம் அல்ல இது, அழுக்கையும் அலங்கரிக்கும் ராவணாயணம் இது!!!
அசுரன் - வாசிப்பு நிறைவடைந்தது
(மேலும் கீழே)

-


23 FEB 2023 AT 20:20

ஒற்றை முகம் மறைக்கவே
பல முகமூடிகள் தேவை நமக்கு
ராவணன் என் செய்திருப்பான்?

-


23 NOV 2019 AT 0:40

தாயக மண்ணில் மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்கள்
தாய் மண்ணின் மாந்தர்கள்
விடுதலையை விதைக்க விதையாய்
விதைத்த விதைகள்
தியாகத்தின் சின்னங்கள்
வீரத்தின் விளை நிலங்கள்
குலத்தின் குலதெய்வங்கள்
எங்கள் மாவீரர்கள் 🙏



-


16 MAR 2019 AT 21:01

அனுமதியின்றி தீண்டா
ராவணனும் ஒப்பே
ராமனுக்கு

-