கருவில் சிசு உதைத்ததால்
ஏற்பட்ட பரவசத்தை
சொல்லிக்கொண்டிருந்தாள் ஒருத்தி
உன் நினைவு வந்தது எனக்கு...
இது எவ்வகையிலும் காதல்
என்றறிவேன்....எனினும் இது
எவ்வகை காதல் என்றறியேன்
-
இதழ்விரித் தின்முகம் தனிலே தொழிற்நுட்பம்
ஏற்றா பதிவே துணிவாம்.-
ஐயாறு நாட்களும் கடன் கொடுப்பர்
அடுத்த மாத முதல் நாள் தொகை பெறுவர்
வட்டி இல்லா கடன் சேவை...
இங்கு
கடனாளிகளுள் ஒரு வகை முதலாளிகள்
இருந்தும்
கடன் கொடுக்க மறுக்கா
தொழிலாளிகள்-
அந்த
தனியார் பேருந்து
கூட்ட நெரிசல்...
இருந்தும்
நோவறியா பயணத்திற்காய்
இன்னிசை பாடல்கள்
பிரிந்தோமே சந்திப்போமா?
-
சபிக்கப்பட்ட உலகம்
சாபங்களா நாம்?
விதிக்கப்பட்ட வாழ்க்கை
வீணாய் சுமக்கும் உயிர்
'நமக்கென்ன' அலட்சியம்
நாசமாய் போகட்டும்
இவையாவும்
மனிதமற்ற மனதோடு சேர்ந்து.-
வெங்காயம் வெட்ட சொல்லேன் அம்மா
வேகமாக வேண்டுமென்றே நடக்கிறேன்
சுண்டு விரலே மேசை தேடு
சட்டென குரல் உயத்திப்பேசேன் அப்பா
அய்யோ ஏதேனும் ஒன்று
எனக்கென்று தனியரை இல்லை-
சட்டென புன்முறுவினால்
யாரென்று யோசிக்காது
யான் புன்னகை சிந்தும்
காலங்களை விலையாய் கொடுத்து
உயிர் காவல் பெற்றுக்கொண்டேன்
என் முகக்கவசத்தின் விலை
பத்து ரூபாய் இல்லை
-
யான் வேண்டியவன்
வேண்டியது கிடைத்திட
வேண்டாது போவேனோ
என் வேண்டுதல்கள், அவன் அறியாது
தீண்டல்கள் தேவையில்லை
தீரா காதலிதில்
நலம் மட்டும் யாசித்திருப்பேன்
அவன் கதையில் வேடம் தரிக்காமல்
-
That time gap
between every two songs,
in shuffle enabled my
favourite play list.
Simply...you.
-
உந்தன் காதலையேனும்
சொல்லி சென்றுவிடு
பசலை நோய் கொண்டே
வாழ்ந்து முடித்திட,
ஓர் உரிமத்தோடு...-