அவளும் நானும்
நீண்ட நெடிய தொலைதூர
கடலின் கரையில்
மனதின் மொழிகளை
கூறிக்கொண்டு
கால்கள் வலிக்க நடந்தும்
அவளை உப்பு மூட்டையாக
சுமத்தும் சொல்ல
ஆசை கொள்கிறேன்-
*தாயை வாழும் தெய்வமாய் நினைப்பவன்
*தற்காலிக அகதியாக வட நாட்டில் வேலை... read more
பல வருட அனுபவ
கசாப்புக்காரனின் கண்கள்
கலங்கின
ஒரு சில வெங்காயங்களை
வெட்டிய உடன்-
பாசத்தையும், அன்பையும்
ஊதியமாக கொண்டு வேலை செய்கிறாள்
அவள்
தலைவாசலின் கோலத்தில் தொடங்கி
அழுக்கு நீக்கிய துவைத்த துணியிலிருந்தும் மறு வேலைக்கு உணவிற்காக கழுவப்படும் பாத்திரம்
வரையில் ஒரு முழு கதையின் முக்கிய கதாப்பாத்திரமாக விளங்கிறாள்
அவள்
அனைத்து வீட்டிகளிலும்
"அம்மா" வாக
-
என்னால் ஏற்படும் பிழைகளுக்கும்
என்னுள் இருக்கும் குறைகளுக்கும்
காலம் கனித்து கடுமையான முறையிலும் அல்லாமல் ஒரு சிறு வார்த்தையும் சின்னஞ்சிறு கோபத்திலும் முற்றுப்புள்ளி வைக்கிறாள் என்னவள்-
உந்தன் அன்பில் முழுகி
உந்தன் கோபத்தில் தெளிந்தும்
உந்தன் அரவணைப்பில் மீண்டும் சங்கமித்தும்
கடைசி வரை வாழ வரம் வேண்டும்
என் கண்மணியே
என்னவாளே-
மதியில்லை என்றாலும்
மனுநீதியின் பெயரால்
மத்தியில் ஒரு கூட்டம் ஆள
நிதி என்னும் பாதி பெயரால்
மாநிலத்தில் ஒரு கூட்டம் ஆள
என்னவோ விதி
மாறினால் வரும் நல்லதொரு செய்தி-
எதிர்காலத்தில் மேல்நோக்கி பறக்க வேண்டிய பறவையின் (முட்டை) கருச்சிதைகிறது
நிகழ்கால புவியீர்ப்பு விசையால்
கீழ்நோக்கி விழுந்ததில்
-
எழுத பிடித்தும்
எழுதாமல் இருப்பது
ரசிக்க யாருமே இல்லை
என்பதாலா இல்லை
எழுதுவதின் அவசியம் மறந்ததாலா-
தனது எச்சத்தால்
அடிமைப்பட்ட மனிதர்களை
சில வினாடிக்கு
தலை நிமிர வைக்கின்றன
விடுதலைப் பெற்ற பறவைகள்-
சொந்தம் பந்தம்
எல்லாம்
என் முன்னே
ஒன்றும் கிடையாது என்பதை
பணம்
சொல்லாமல் சொல்கிறது
வட்டி கணக்கை சரிபார்க்கும்
போது-