கந்தனுக்கு
அரோகரா...
முருகனுக்கு
அரோகரா..-
30 JUL 2021 AT 9:52
எங்கும் நிறைந்திருக்கும்
சின்னக் குமரா
உனை தொழாத
நொடி உண்டோ- நினைக்கா
பொழுதுண்டோ- முப்பொழுதும்
வணங்குகிறேன் என்
முத்தமிழ் இறைவா- என்
இன்னல் தீர்க்க நீ
இறங்கி வா வா வா...!!!-
16 APR 2019 AT 13:55
நெற்றியில் நீரும் வைத்து வாழ்வின்
வெற்றியில் வேண்டும் நீயென தினமும்
புற்றில் பாம்பென உன்னில் நானும்
பற்றில் இருக்க வேண்டும் முருகா-
30 DEC 2024 AT 20:58
அறுபடை வீடுகள் உடைய
ஆறுமுக நாதா..
இனிய வேல் கொண்ட
ஈசன் மைந்தா..
உள்ளம் உருகிட செய்து
ஊர் எங்கும் காத்து நிற்பவரே!
என்றும் உன் அருளுடன்
ஏற்றமே என் வாழ்வில்..
ஐயம் எமை நெருங்கவிடாத எம்
ஒற்றை பலமே!
ஓம் குமரா.. என் இன்னல்களில்
ஒளடதமாக என்னோடு என்றும் நீர்..-